Posts

Showing posts from March 27, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2. 1

Image
காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை. - பகுதி - 2-1
காசிப்பயணம். -1.
முன் காலத்தில் காசி யாத்திரை போவதென்றால், இறுதிப் பயணம் என்பதாகவே சொல்வார்கள். காரணம் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எத்துனை சிரமப்பட்டாலும், காசி விசுவநாதரை தரிசிப்பதையே வாழ்நாளின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர் பல்லோர்.
ஆனால் இன்றைய நிலையே வேறு. எத்துனை விதமான போக்குவரத்துகள். அதுவும் இந்த விமானப் பயணம் எளிமையாக்கப் பட்டவுடன், ஆண்டவனின் தரிசனம் பெறுவது எளிதான வரமாகிவிடுகிறது. காரணம், பழைய காலம் போன்று குடும்பம், தொழில் என்று அனைத்தையும் விட்டு மாதக்கணக்கில் நேரம் செலவிட வேண்டிய தேவை இருப்பதில்லை. எல்லாம் அவன் செயல்!
நாங்கள் கோவையிலிருந்து விமானம் மூலம் முதலில் தில்லி சென்று அங்கிருந்து காசி செல்வதாக முடிவெடுத்திருந்தோம் காரணம் எங்கள் மகள் தன் குடும்பத்துடன், அமெரிக்காவிலிருந்து, தில்லி வந்து எங்களுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். இந்த இடத்தில் முதலில் நான் இன்னம்பூர் ஐயாவையும், திரு தேவ் அவர்களையும் நினைவு கூறாவிட்டால் நன்றி மறந்தவளாவேன். ஆம் நாங்கள் தில்லி பயணம் என்று ஆரம்பித்தவுடனே இ ஐயா , எனக்கு ஒரு அருமை…

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை : பகுதி - 2.-2

Image
எண்ணம் போல் வாழ்வு என்பர் பெரியோர். இதையே எமர்சன்,
The happiness of your life depends upon the quality of your thoughts 
என்று அழகாகச் சொல்லுவார். உண்மையல்லவா. நாம் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும், நம் எண்ணம் தானே அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறது.ஆகவே நாம் நம் எண்ணத்தால் உயர்ந்து நிற்போமே! அதாவது, வெளித் தோற்றமானாலும்,[ நிமிர்ந்த நன்னடை] மனதளவிலும், ஆன்மீக நிலையிலும் உயர்ந்து நிற்போமேயானால், தன்னம்பிக்கையோடு, மன அமைதியும், அதன் மூலம், வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்கள் அது எத்தகையதாயினும், சமாளிக்கும் பக்குவமும் வந்துவிடுமல்லவா ?  மன்னிக்கவும், அதிக பிரசங்கம் பண்ணி விட்டேனோ.....எல்லாம் காசிவாசம் கொடுத்த பக்குவ நிலைதான்.

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 2.

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 2.
ஒரு மனிதரின் மன ஓட்டத்திற்கு அவருடைய வயது என்றுமே தடையாக இருப்பதில்லை. அவ்வாறு ஒருவருக்கு இருக்கிறதென்றால் அது அவருடைய பழக்கத்தின் குறையே தவிர இயற்கையின் விதி அல்ல. ராமச்சந்திரன் சற்றே கரடு முரடாக வெளித் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், தன் குடும்பம் என்று வந்துவிட்டால் மனிதர் சொக்கத் தங்கம்தான், அந்த ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான உருவமும், அதற்குத் தகுந்தாற்போன்ற கட்டையான குரலும் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுப்பதும் உண்மைதான். மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஒரு தலைவலி, காய்ச்சல் என்றால் கூட துடித்துப் போய்விடுவார். மனைவி பள்ளியில் உயர் வகுப்பு ஆசியையாக இருந்தாலும கணவர் முன்பு பெட்டிப் பாம்பாக அடங்கி இருப்பவர்.
குலதெய்வம் கும்பிடுவது என்றால் ராமசந்திரனுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விசயம். குடும்பத்தில் எந்த நல்ல காரியமாக இருந்தாலும் தன் குலதெய்வமான அங்காள அம்மனை தரிசித்து ஆசி வாங்காமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார். குலதெய்வம் வரம் கொடுத்தால் அந்த காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையும் கொண்டவர். இன்று மகன் இளமாறனின் திருமணம் பற்றி அம்மனின…