Tuesday, June 21, 2022

அப்பா என்றால் ....

அப்பா எனும் அற்புதம் புவியில் என்றும் பெருவரம் தரணியில் அவரே தனிரகம் அல்லல் தீர்க்கும் அருமருந்து இருள் நீக்கும் அகல்விளக்கு அகிலம் போற்றும் இறைதூதர் கன்னற் சுவையின் கருவூலம் கவிதை வானின் நட்சத்திரம் கருணைத் தேரின் மணிமகுடம் கற்பகத் தருவின் ஆணிவேர் பூவுலகை நீங்கினாலும் மனமதை நீங்காமல் நிறைந்திருக்கும் நித்தியன் நித்திரையிலும் நீதி சொல்லும் நிரந்தர நிமலன் சொற்திரையில் நிம்மதி அளிக்கும் நாயகன் எல்லோரும் நலம் வாழும் நல்லெண்ணம் கொண்ட மனிதன் என்றும் நீங்காமல் நிறைந்திருக்கும் ஈசனின் புத்திரன் குகன் எனும் சிநேகிதன் புவனம் போற்றும் உத்தமன் என் வாழ்நாள் வழிகாட்டியாக வாகை சூடும் அன்பான தந்தையவர்! வரலாறாக நிலைத்திருக்கும் வல்லவர்!!

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...