பவள சங்கரி
The Madman - when my sorrow was born - Khalil gibran
எம் துக்கம் செனித்தபோது
(சோகத்தின் சுகம்)
எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும் பாசத்தோடு பராமரித்தேனதை.
மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான ஞாலத்தையும் நேசித்தோம். இந்தத் துக்கமும் மெல்லிதயம் கொண்டிருந்தாலும், எம்முடையதும் துக்கத்தின்மீது கருணையுடனே இருந்தது.
எம் துக்கமும், யானும் , அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தத் துக்கம் சொற்திறம் கொண்ட இனிய நாவைக் கொண்டிருந்ததாலும், , எம்முடையதும் துக்கத்துடன் அதே சொல்லாற்றலை வெளிப்படுத்தி இருந்ததாலும், எமதருமை ஞான்றுக்கும் சிறகு முளைத்திருந்தது, மற்றும் எங்கள் சுரசனிகளும் சுவனங்களால் கட்டுண்டுக் கிடந்தது.
எம் துக்கமும் யானுமென நாங்களிருவரும் இணைந்து இசை பாடிக்கொண்டிருந்தபோது, எங்களின் அண்டை அயலார் தத்தம் சாளரங்களின் அருகமர்ந்து, அம்பரத்தினும் ஆழமானதும் மற்றும் விசித்திரமானதுமான நினைவலைகளைச் சுமந்த அந்த மெல்லிசைகளைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.
யானும், எம் துக்கமும் ஒன்றாக நடை பயின்றபோது , தத்தம் மென்பார்வையுடன் எங்களைப் பரிவோடுப் பார்த்தவர்கள் தங்களின் அபரிமிதமான இன்சொற்களுடன் கிசுகிசுக்கவும் செய்தனர். மேலும் அதிஅற்புதமான அத்துக்கத்துடன் இருப்பதில் யான் கொள்ளும் தற்பு காரணமாக எங்கள் மீது கூழைப் பார்வைகளை வீசியவர்களும் உண்டு.
ஆயினும் மற்ற உயிரினங்களைப் போன்றே எம் துக்கமும் மரித்துப்போனது; யான் ஆவேசமும், ஆழ்ந்த சிந்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு தனிமையில் வாடுகிறேன்.
தற்போது யான் செப்பும் மொழிகளனைத்தும் எம் செவிப் பறைகளையே பலமாகப் பதம் பார்க்கின்றன..
யாம் இசைக்கும் எம் மெல்லிசைகளைச் செவிமடுக்க எந்த அண்டை அயலாரும் வருகிலர்.
யான் தெருவில் செல்லும் தருணமதிலும் எம்மைக் கண்டுகொள்வோரும் இலர்.
எம்முடைய நித்திரையில், “பாவம், தம் துக்கம் மரித்துப்போனதால் பரிதவித்துக் கிடக்கிறான் பார், ஆங்கொரு மனிதன் ” என்ற பரிதாபமான குரல் மட்டுமே ஒலிக்கிறது.
AND WHEN MY JOY WAS BORN
மேலும் எம் சுகம் செனித்த தருணமதில்.....
மேலும் எம் சுகம் செனித்தபோது, ஆர்வமாக அதை எம் கரங்களில் ஏந்திக் கொண்டு, “வாருங்கள், எம் அணடை அயலோரே, வந்து பாருங்கள், எமக்கு இன்று சுகம் செனனமாகியிருக்கிறது, கதிரொளியில் கலகலவென நகைக்கும் அதனுடன் கைகோர்த்துக் கொண்டாடலாம் வாருங்கள்”, என எம் இல்லத்தின் கூரைமீது நின்று கூவியழைத்தேன்.
ஆயினும் எம் அதிஅற்புதமான அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அண்டை அயலோர் எவரும் வருகிலர்.
ஏழு அம்புலியிலும் யான் எம் இல்லத்தின் மேற்கூரையின் மீதிருந்து நிதமும் கூவிக்கூவி அழைத்தபோதினும் எம்மைக் கண்டுகொள்வோர் எவருமிலர். மேலும் யானும் எம் சுகமும், சட்டை செய்வோரும், வருகைபுரிவோரும் எவருமின்றி தனிமையில் ஏங்கிக் கிடந்தோம்.
பிறகு, எம்மைத்தவிர மற்றெந்த நல்லிதயமும் அதனை ஆரத்தழுவவுமின்றி, தம் மெல்லிதழ்களால் சும்பனமுமிடாதலாலும் எம் சுவர்கமது சோகத்தில் வெளுத்தேப்போய் விட்டது.
பிறகு எம் மகிழ்ச்சி தனிமைப்படுத்தலால் செக்கமானது. மேலும் தற்போது யான் அவிதலான எம் துக்கமதின் இனிய நினைவுகளுடன், மரித்த எம் மகிழ்ச்சியையும் நினைவு கூர்கிறேன். ஆனால் நினைவுகள் என்பது சில கணமே காற்றில் சலசலத்துப் பின் மௌனமாகிப்போகும் கூதாளிக் காலத்து இலைதானே.
When My Sorrow Was Born
When my sorrow was born I nursed it with care, and watched over it with loving tenderness.
And my Sorrow grew like all living things, strong and beautiful and full of wondrous delights.
And we loved one another, my Sorrow and I, and we loved the world about us; for Sorrow had a kindly heart and mine was kindly with Sorrow.
And when we conversed, my Sorrow and I, our days were winged and our nights were girdled with dreams; for Sorrow had an eloquent tongue, and mine was eloquent with Sorrow.
And when we sang together, my Sorrow and I, our neighbors sat at their windows and listenend; for our songs were deep as the sea and our melodies were full of strange memories.
And when we walked together, my Sorrow and I, people gazed at us with gentle eyes and whispered in words of exceeding sweetness. And there were those who looked with envy upon us, for Sorrow was a noble thing and I was proud with Sorrow.
But my Sorrow died, like all living things, and alone I am left to muse and ponder.
And now when I speak my words fall heavily upon my ears.
And when I sing my songs my neighbours come not to listen.
And when I walk the streets no one looks at me.
Only in my sleep I hear voices saying in pity, "See, there lies the man whose Sorrow is dead."
And When My Joy Was Born
And when my joy was born I held it in my arms and stood on the house-top shouting, "Come ye, my neighbours, come and see, for Joy this day is born unto me. Come and behold this gladsome thing that laugheth in the sun."
But none of my neighbours came to look upon my Joy, and great was my astonishment.
And every day for seven moons I proclaimed my Joy from the house-top -- and yet no one heeded me. And my Joy and I were alone, unsought and unvisited.
Then my Joy grew pale and weary because no other heart but mine held its loveliness and no other lips kissed its lips.
Then my Joy died of isolation.
And now I only remember my dead Joy in remembering my dead Sorrow. But memory is an autumn leaf that murmurs in the wind and then is heard no more.

நன்றி : திண்ணை வெளியீடு