Posts

Showing posts from December 4, 2016

சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Image
மூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம். 

தீவிர சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

Image
பொன் மனச் செல்வி!
செல்வி. ஜெ. ஜெயலலிதா தமிழக  முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
தற்போதைய முதல் அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, ’அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்று அன்பாக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய கலையுலகச் சாதனையை நிரூபித்தவர். செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தனிச் சிறப்பென்பதே, அவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் அத்துறையின் எல்லைவரை சென்று சாதிக்கும் வல்லமைப் பெற்ற, தோல்வியைக் கண்டுத் துவளாத, துணிச்சல்மிகு பெண்மணி என்றால் அது மிகையாகாது. ஃபீனிக்ஸ் பறவை போல, அழிக்க, அழிக்க, அந்தச் சாம்பலிலிருந்து மேலும், மேலும் புத்துணர்வுடன் உயிர் பெற்று வரும் வல்லமை கொண்டவர் இந்தப் பன்முக நாயகி. அந்த வகையில் பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும், தன்னம்பிககை எனும் மகுடம் சூடிய இரும்புப் பெண்மணி, தாய்மை முலாம் பூசிய தங்க மங்கை,