Wednesday, July 5, 2017

INDIA /II – பொழுது புலர்கிறது!



கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

INDIA /II
The day breaks
பொழுது புலர்கிறது
kanyakumari-banner-04
பொழுது புலர்கிறது,
என் செவிகளினூடே மத்தளமிட்டவாறு.
நறுமணமிக்க மலர்கள்
 நித்திய ஒழுங்கு முறையில்
களங்கமின்றி மலர்கின்றன.
ஒளிரும் கதிரவனுடன்,
வழமையாய் மனிதருக்கு ஊட்டமளிக்க
வகைவகையாய் கனியும் அற்புதக்கனிகள்
இசைக்கருவிகள்,
மேசைவிரிப்புகளும் ஆடைகளும்.
இப்படியொரு அதியற்புத நாட்டை
என்றேனும் நான் கனவிலும் கண்டிருப்பேனா?

INDIA / III – புள்ளினங்களின் சூர்யோதயம்


கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி
Amitābha in Sukhavati (from the Mogao Caves, Dunhuang, Tang China) wikipedia
AMITĀBHA IN SUKHAVATI (FROM THE MOGAO CAVES, DUNHUANG, TANG CHINA) WIKIPEDI
புலரும் பொழுதினில்
மங்கும் நட்சத்திர ஒளியினில்
பன்முக இரத்தினமொன்று புத்துயிர் பெறுகிறது.
பல்வகைப் புள்ளினங்களும் சிறகு விரிப்பதங்கே;
இன்கா நாகரீகத்தைக் கொத்தியவாறு சில,
எகிப்திய பிரமிடுகளின் உச்சத்தைத் தாங்கியவாறு சில
லும்பினியில் மாயா தேவியை ஆசிர்வதித்தவைகள் சில.
சாகளின் பறவைகளும் பிகாசாவின் 
உடமைகளும்கூட அங்கிருந்தன.
இரத்தினமும் கீச்சொலிகளும்
அனைத்தும் வண்ணப்பகட்டோடு பறக்கின்றன.
பொழுது புலர்தலின்
புதிதான சூர்யோதயக் களிம்பிற்காக
சாளரம் ஒவ்வொன்றும் பரந்து விரிகின்றன
திறந்த சாளரங்களின் முன்பாக
நற்சிறகுகளின் உடமையாளர்கள் சறுக்குகிறார்கள்.
ஒருவரையொருவர் அன்பு செலுத்தியவாறும்
அவ்வப்போது சண்டை சச்சரவுகளுடனும்,
அப்புள்ளினங்கள் இலட்சியத்தையோ அன்றி 
சலுகையையோ சட்டைசெய்யவில்லை,
சொத்தையும் ஆடம்பரத்தையும் புறக்கணித்து
புலரும்பொழுது அளிப்பதெதுவோ
அது சிறிதோ பெரிதோ 
நித்தமும் நிறைவுடன் கொண்டாடுகின்றன.
புள்ளினங்களின் சூர்யோதயமென்பது ஒளிரும் இரத்தினங்கள்.
அங்குதான் சுக்காவதியெனும் மீப்பெரும்
வாக்களிக்கப்பட்ட நிலமும் உள்ளது.