Posts

Showing posts from April 17, 2011

இரட்டை முகம்!

இரட்டை முகம்!

பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.
அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....
அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல
பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடு…

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில்

Image
அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் - ஆனைமலை - பொள்ளாச்சி.


மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உறையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.
மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமானக் காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்…

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)
பன்முக மனிதர்கள் இருப்பதைப் போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பல முகங்கள் இருக்கிறது. ஆம், அக வாழ்க்கையின் முகம் ஒன்று, புற வாழ்க்கையின் முகம் வேறு. அந்த அகம் மற்றும் புற வாழ்விலும் உட்பிரிவுகளும் உண்டு. அகவாழ்வின் முகத்திற்கும், புறவாழ்வின் முகத்திற்கும் பல மாற்றங்கள் உண்டு. நிறைய முரண்பாடுகளும் இருக்கும். அதை தூக்கி எடை பார்க்க ஆரம்பித்தால் குடும்பம், உறவு, பந்தம் என்ற அக வாழ்வுதான் முற்றிலும் பாதிக்கப்படும். இதையெல்லாம் அதிக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாலே முடிவு பிரம்மச்சரியமோ அல்லது காவி உடையோ என்ற தப்பித்தல்தான். ஆனாலும அந்த தப்பித்தல் ஒரு தற்காலிகமானதாகத் தான் இருக்குமே தவிர அதுவே நிரந்தரமாகாது.
ரம்யா ஊருக்குச் செல்ல திட்டமிட்டாள். தன் தந்தை, தாய் அன்புத் தம்பி என்று சிறிய குடும்பம்தான். எல்லோரையும் பார்த்து வருடம் ஒன்றாகிவிட்டது. இதற்கு மேல் தான் ஒரு முறை சென்று வராவிட்டால் பிரச்சனை பலவாகிப் போகும்.
‘ என்ன ரம்யா, உனக்கு லீவ் சேங்க்‌ஷன் ஆகிவிட்டது போல. சரவணன் அங்கு கரிச்சி கொட்டிக்கிட்டு இருக்கான்’
‘ஆமாம்ப்பா, அவன் கடக்கிறான். நான் இரண்டு மாதம் முன்பே அப்…