Saturday, July 2, 2016

பாப்பா பாப்பா ... கதை கேளு! 15

சொற்கோவில்



சொற்கோயில்! அற்புதமான ஆன்மிக இதழ்! அன்பு நண்பர் திரு. இரா. குமார் அவர்களின் மேன்மைமிகு இந்த பத்திரிக்கை மாதமிரு முறை வர இருக்கிறது. இவ்வரிய இதழில் முதல் இதழிலேயே எம் படைப்பையும் ஏற்றருளி எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வானும், கடலும் போல இறையருளால் இந்த சொற்கோயில் இப்பிரபஞ்சம் உள்ளமட்டும் சிறப்பாக வலம் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.


Thursday, June 30, 2016

மனிதாபிமானம்




ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த தம்பதியரின் நிலையில் இந்த 4000 மிகப்பெரியத் தொகையாகத் தெரிய மலைத்துப்போய் நிற்கிறார்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் பெற்ற மகராசர்கள். மகள் வீட்டில் பெரியவர்கள் ஒரு பகுதியிலும் மகன் ஒரு பகுதியிலும் தனித்தனியாக குடித்தனம் செய்கிறார்கள். மகனும் தன் வசதிக்கு பெற்றவர்களுக்கு சாப்பாட்டிற்கு தன்னால் முடிந்ததைத் தருகிறாராம். இந்த நிலையில் ஓரளவிற்கு வசதியாக இருக்கும் மகள் தன் வீட்டிற்கு பெற்றோர் சரியாக வாடகை தருவதில்லை என்பதற்காக வெளியே முடுக்கிவிடச் சொல்லிவிட்டாராம்… இந்தக்கொடுமையான சூழ்நிலையில் முதியோர் ஓய்வூதியம் பற்றி அறிந்து, அம்மா புண்ணியத்தில் 500 ரூபாய் அதிகம் உயர்ந்து 1500 கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு வந்தால் இங்கு இந்த நிலை..

Wednesday, June 29, 2016

பாப்பா பாப்பா .. கதை கேளு! 13

வாழ்க்கை







பொது சார்புக் கோட்பாடு


பவள சங்கரி

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativityஎன்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள்.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரிடம், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் இப்போது உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் இருப்பது உண்மைதானே?” என்று கேட்டானாம். அதற்கு ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பார். அங்கு நட்சத்திரம் தெரிகிறதா?” என்று கேட்க அவன், “ஆம்” என்று பதிலளித்தான். உடனே ஐன்ஸ்டீன், “அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டதொன்று. நீ இப்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளியிட்ட ஒளி மட்டுமே என்பதை விளக்கமாகக் கூறி அந்த இளைஞனுக்கு புரிய வைத்தபோது அவன் வாயடைத்து நின்றானாம்!.