Posts

Showing posts from October 10, 2010

இந்தியத் திரு நாட்டின் மறு மலர்ச்சியில் பெண்கள் - பாகம் - 6.............

Image
ஆஷாலதா சென் - [1894 -1986 ].
காந்தியவாதி, சமூக சேவகி, இலக்கியவாதி, என்ற பன்முக நாயகி ஆஷாலதா சென், பிப்ரவரி மாதம், 2ம் நாள், 1894ம் ஆண்டு, நவகாளி [ இன்றைய வங்காள தேசம் ] எனும் இடத்தில், நற்பண்பும், கல்வித் திறனும், அறிவுச் செழுமையும் நிறைந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பகாலா மோகன் தாஸ் குப்தா, மாவட்ட நீதிபதிகளின் நீதிமன்ற வழக்கறிஞராகவும், தாய் மோனோடா தாஸ் குப்தாவின் குடும்பத்தின் பெரும்பாலானவர்கள், அரசாங்க உயர் பதவியில் இருக்கக் கூடியவர்கள்.

அவருடைய பாட்டி, நபசசி தேவி, தங்கள் குடும்பத்தில் படிப்பறிவுப் பெரும் பெண்கள் விரைவில், விதவையாகிவிடுகிறார்கள் என்ற மூட நம்பிக்கைக் கொண்ட தன் மாமியாருக்குத் தெரியாமல், ஆஷாலதாவிற்கு, எழுதப் படிக்க மட்டுமல்லாது, நல்ல தரமான உயர் கல்வியையும், தன் கணவர் வழி உறவினர்கள் மூலம் பெறும்படி செய்தார்.

இவரும்
இலக்கிய வட்டத்தில் பேசப்பட்ட ஒரு இலக்கியவாதி. கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தாலும், பழமையில் ஊறிப்போன காலமாதலால், தன் மகள் மோனோடாவை 10 வது, வயதிலேயே படிப்பை நிறுத்தி, திருமணம் செய்து …

நவீன தேசிய கீதம்............?

" வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்" என்று சொல்வார்கள். சும்மா சிரிப்பதற்காக மட்டுமே இந்தப் பாடல். நேற்று என் தோழிஅவர் வீட்டு கொலுவிற்குஎன்னை அழைத்திருந்தார். அந்த கொலு விழாவில் ஒரு குழந்தை இந்தப் பாடலை காமெடிக்காகப் பாடியது..........மிகவும் நகைச்சுவையாக இருந்ததால் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன். இதை நம் தேசிய கீதப் பாடல் ராகத்தோடேயே பாடிப்பாருங்கள்.
ஜனங்களின் மனங்களில் பசிபிணி பஞ்சம் பாருங்கள் இதுதான் இந்தியா
பஞ்சாப் பறக்குது பாரும் புரோட்டா தாளிக்கத் தக்காளி குறுமா வெந்தயக் குழம்பாம் வெங்காய வடையாம் ஊத்தப்பம் இருந்தால் சரிதான் இட்லி சட்னி மீது ஆசை தோசைவடை மசால்வடை ஜாங்கிரி ஜாங்கிரி இருந்தால் சரிதான்
ஜனங்களின் மனங்களின் பசிபிணி பஞ்சம் பாருங்கள் இதுதான் இந்தியா
இட்லி சட்னி சாம்பார் சுடசுடச் சுடக் காபி......
எப்புடீ....................?

செம்புலப் பெயல் நீராள்..............!

Image
துயரச் சுமையைச் சுமந்து களைத்திருக்கும் எனைக் காக்க வருவாயா? எங்கே இருக்கிறாய் நீ?
என் நம்பிக்கையும் நீ ! தொலைந்த என் நிம்மதியும் நீ ! எங்கே இருக்கிறாய் நீ ?
இருளில் வழிகாட்டும் ஒளியாயிரு ! சோர்ந்து போன இதயத்திற்கு இதமாயிரு ! பிணியைப் போக்கும் மருந்தாயிரு ! கையோடு கைகோர்த்து தோழமையாயிரு !
எவ்வளவு காலம்தான் மறைந்து வாழ்வாய் ? யாருக்காக மறைய வேண்டும் ? யாரைக் கண்டு அஞ்சி ஒடுங்க வேண்டும் ? மண்ணிற் தோன்றிய மாந்தரைக் கண்டா மயங்கினாய் ?
சேயாய் கனியிதழ் முத்தமீந்தாய் ! சகோதரியாய் பாச மலரானாய் ! மனைவியாய் காதல் மலரணையானாய் ! தாயாய் தன்னுயிர் ஈந்தாய் ! "சுயமாய்" நிற்க மட்டும் ஏன் தயங்கினாய் ?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 4.

Image
ஆரோக்கியமான அழகு என்பது, மேல்பூச்சு இல்லாத இயற்கையான பளபளப்பான தோற்றம்தான்..ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவு மூலமாகதான் பாதுகாக்கப் படுகிறது, ஆகவே நாம் உண்ணும் உணவில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டாலே ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.
உலகம் முழுவதும் கிடைக்கக் கூடிய ஒரு சில காய் வகைகளில், கத்தரிக்காயும் ஒன்று. ஆங்கிலத்தில் மட்டும் இதற்கு ஆறு வித்தியாசமான பெயர்கள் இருக்கிறது. இந்திய உணவு வகைகளில் கத்தரிக்காய்க்கு மிக முக்கிய பங்குண்டு. கொழுப்புச் சத்து இல்லாத, குறைந்த கலோரி உணவு என்பதும் இதன் தனிச் சிறப்பு. எண்ணெய் உறிஞ்சும் தன்மை என்பது இந்த காய்க்குச் சுத்தமாக இல்லாததால், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களின் கனவு என்றே இதைக் கூறலாம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாகச் சமைத்தாலும் நம்ம ஊர் காரசாரமான சமையல் முன்னே, வேறு எதுவும் நிற்க முடியாதுங்க.........பலவிதமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் இருக்கும் கத்தரிக்காய்,சுவையில் மற்ற காய்கறிகளிலிருந்து தனிப்பட்ட ஒன்றாகும். …