துயரச் சுமையைச் சுமந்து களைத்திருக்கும்
எனைக் காக்க வருவாயா?
எங்கே இருக்கிறாய் நீ?
என் நம்பிக்கையும் நீ !
தொலைந்த என் நிம்மதியும் நீ !
எங்கே இருக்கிறாய் நீ ?
இருளில் வழிகாட்டும் ஒளியாயிரு !
சோர்ந்து போன இதயத்திற்கு இதமாயிரு !
பிணியைப் போக்கும் மருந்தாயிரு !
கையோடு கைகோர்த்து தோழமையாயிரு !
எவ்வளவு காலம்தான் மறைந்து வாழ்வாய் ?
யாருக்காக மறைய வேண்டும் ?
யாரைக் கண்டு அஞ்சி ஒடுங்க வேண்டும் ?
மண்ணிற் தோன்றிய மாந்தரைக் கண்டா மயங்கினாய் ?
சேயாய் கனியிதழ் முத்தமீந்தாய் !
சகோதரியாய் பாச மலரானாய் !
மனைவியாய் காதல் மலரணையானாய் !
தாயாய் தன்னுயிர் ஈந்தாய் !
"சுயமாய்" நிற்க மட்டும் ஏன் தயங்கினாய் ?
இருளில் வழிகாட்டும் ஒளியாயிரு !
ReplyDeleteசோர்ந்து போன இதயத்திற்கு இதமாயிரு !
பிணியைப் போக்கும் மருந்தாயிரு !
கையோடு கைகோர்த்து தோழமையாயிரு !
......அருமை.
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ReplyDeleteஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்
முதலில் படித்ததும், கவிதையின் முரண்பாடுகள் இறுதியில் சரி செய்யப்படவில்லையே என்று எண்ணினேன். மீண்டும் படித்தவுடன் தான் விளங்கிற்று, உங்கள் தேடல் யாரை பற்றியதென்று!!!!
ReplyDeleteகவிதை - கார்மேகம் போல் அழகு - மழை எப்போது பெய்யும் புலவரே?
பி. கு: சுயமாய், நீங்கள் சிந்திகிறீர்கள், சுயமாய் நிற்பது மட்டும் அன்றி, சுயமாய் நிற்பதற்கு நீர் உதவுபவர் எனவும் கருதுகிறேன்!!!!
அருமை
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteமிகப்பெரும் விடயம் சுயமாயிருத்தல். சுயம் தொலைத்த மனித வாழ்வில் சுயம் தேடும் கவிதை அழகு. தலைப்பு மட்டுமே ஒரு கவிதை...! அதன் உட்பொருள் உங்கள் மொத்த கவிதையின் "சுருக்கம்". நல்ல எழுத்து. இதயசாரலில் இருந்து இதயம் திறந்த பாராட்டுகள்.
ReplyDeleteஇருளில் வழிகாட்டும் ஒளியாயிரு !
ReplyDeleteசோர்ந்து போன இதயத்திற்கு இதமாயிரு !
பிணியைப் போக்கும் மருந்தாயிரு !
கையோடு கைகோர்த்து தோழமையாயிரு !
போற்றத்தக்க எதிர்ப்பார்ப்பு...
நன்றிங்க சித்ரா, தமிழரசி.
ReplyDeleteநன்றிங்க எல்.கே. தமிழ்க்காதலரே,
ReplyDeleteநன்றிங்க தமிழமிழ்தம், கோபி ராமமூர்த்தி.
ReplyDeleteநன்றிங்க ஆசியா.
ReplyDelete\\சுயமாய்" நிற்க மட்டும் ஏன் தயங்கினாய் ?\\ நல்ல கேள்வி.
ReplyDeleteநல்ல அருமையான கவிதைங்க
ReplyDeleteநன்றிங்க அம்பிகா.....
ReplyDeleteநன்றிங்க வேலு......
ReplyDelete"சுயமாய்" நிற்க மட்டும் ஏன் தயங்கினாய் ?//
ReplyDeleteஉங்க பாட்டியம்மா கிட்ட கேட்ட கேள்வியா? அதாங்க அந்த காலத்து பொண்ணுகதான் அப்டி இப்போல்லாம் 90 சதவீத பெண்கள் சுயமாய்த்தான் சிந்திக்கிறார்கள் உழைக்கிறார்கள் வாழ்கிறார்கள்!
very nice!!
ReplyDeleteநன்றிங்க மேனகா.
ReplyDelete