Showing posts with label கவிதை - அந்தாதி வகை. Show all posts
Showing posts with label கவிதை - அந்தாதி வகை. Show all posts

Tuesday, October 1, 2013

அல்லியும் ஆதவனும்!



பவள சங்கரி





ஆதவனே அல்லியின் மொழியறிவான்
அறிவானவன் பிரம்மாக்களின் உய்கையை 
 உய்கையின் முடிவாக்கும் வேதமது கீதை
கீதையின் பாதையில் இனியதொரு கீதம்    

 கீதமதின்  வேதம் வீணையறியும் மாயம்
 மாயமும் இதமாய் ஏற்படுத்தும் காயம்
காயமிது காற்றடைத்த பையாயினும்
பையினுள் நிறைந்திருக்கும் பரிவெனும் மெய்

 மெய்கண்டால்  உளத்தில் சித்திக்கும் தவம்
தவம் கசடற கருத்தினை வழங்கும் கற்பகமாய்
கற்பகமும் மாசில்லா மனமருளும் மரகதமாய
மரகதமணியும் மலர்செண்டும் மதமறியாது  

மதமும் பதமாய் கட்டுக்குள்போகும் மந்திரமாய்
மந்திரமும் தந்திரமும் மறைந்து மலருமங்கு மனிதம்
மனிதம் மகோன்னதத்தின் மாசற்ற சோதி
சோதிப்பிழம்பாய் சுட்டும்விழியாய் சுடரொளியாய் ஆதவன்!


படத்திற்கு நன்றி:
http://elenau-elena.blogspot.in/

                                                                                 

Sunday, September 5, 2010

அழிவில் ஆக்கம்.......


விதையின் அழிவு துளிர்
துளிரின் அழிவு மரம்
மரத்தின் அழிவு கன்று
கன்றின் அழிவு பூ
பூவின் அழிவு காய்
காயின் அழிவு கனி
கனியின் அழிவு விதை................

அன்பின் அழிவு துன்பம்
துன்பத்தின் அழிவு இன்பம்
இன்பத்தின் அழிவு சோகம்
சோகத்தின் அழிவு அன்பு................

வெற்றியின் அழிவு தோல்வி
தோல்வியின் அழிவு நம்பிக்கை
நம்பிக்கையின் அழிவு அவநம்பிக்கை
அவநம்பிக்கையின் அழிவு வெற்றி.............

இயற்கையின் அழிவு செயற்கை
செயற்கையின் அழிவு உண்மை
உண்மையின் அழிவு பொய்மை
பொய்மையின் அழிவு இயற்கை..............

நிம்மதியின் அழிவு [மன]அழுத்தம்
அழுத்தத்தின் அழிவு அன்பு
அன்பின் அழிவு தனிமை
தனிமையின் அழிவு தோழமை
தோழமையின் அழிவு துயரம்
துயரத்தின் அழிவு நிம்மதி.................

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...