Saturday, August 2, 2014

Friday, August 1, 2014

கந்த சஷ்டிக் கவசம் பிறந்த கதை

பவள சங்கரி



முருகனின் புகழ் பாடும் பல நூறு பாடல்கள் இருப்பினும் இந்த கந்த சஷ்டிக் கவசம் மட்டும் மக்கள் மனதில் தனிப்பெரும் இடம் பிடித்துள்ளதும் உண்மையே..! இப்பாடலைப் பாடியவர் பாலதேவராய சுவாமிகள் . 

 பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை எத்தகைய உணர்வுப்பூர்வமானது என்று பாருங்களேன்!. பாலதேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார், என்னென்னவோ சிகிச்சைகள் செய்தும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வேதனை தாங்காத நிலையில், வாழ்க்கையே வெறுத்துப் போனதால் கடலில் விழுந்து உயிரையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்து  திருச்செந்தூருக்கு வந்து சேருகிறார்.

Tuesday, July 29, 2014

ஆடிப்பூர நாயகியே!


பவள சங்கரி




ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம்  மின்னும் பொன்னாய்
 ஆடிப்பாடி வருகிறாள் மின்னிடையாள் ஆனந்தமாய்
கொஞ்சுதமிழும்  பஞ்சு மெல்லடியும்  பாந்தமாய்
பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
அபயமளிக்கும் நற்றுணை வேதமே அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
நித்தமும் நின்னை நினைந்துருகும்  வரமருள்வாய்
வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!

நன்றி : வல்லமை

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...