Saturday, August 2, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்!


பவள சங்கரி



நட்பிற்கு இலக்கணம் - அதியமான் - ஔவை


அதியமான் நெடுமான் அஞ்சியை அறியாத தமிழரும் இருக்க இயலாது. தனக்குக் கிடைத்த அற்புதமானதொரு நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டி ஔவைக்கு அளித்த வள்ளல் அதியமான் நெடுமான். அதை ஒளவையே தம் திருவாய் மலர்ந்து பாடும் பாடல்தான் இது. இதன் பொருள்;

அற்புதமான நெல்லிக்கனி இதை உண்டால் என்றும் இறவாமல் இருக்கலாம் என்று தெரிந்தும் அதை நீ உண்ணாமல், அச்செய்தியைக்கூட  எனக்கு சொல்லாமல்,  நான் என்றும் இறவாமல் இருக்க வேண்டும் என்று எனக்கு அதனைக் கொடுத்தாயே அதியர் கோமான் அஞ்சி! நீ ஆலகாலவிடத்தை தன் கண்டத்தில் அடக்கி உலகை உய்ய வைத்த சிவனைப் போல சிறப்பாயாக"

அதியமான் கற்பனைப் பாத்திரம் அல்ல.. வரலாற்று நாயகன். அவன் வாழ்ந்ததற்கான ஆதாரம், ஜம்பை கிராமத்தில்  தாசிமடம் என்ற இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் கிடைத்த கல்வெட்டு. ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள அக்கல்வெட்டில் இருந்த கி.பி. முதல் நூற்றாண்டு எழுத்துக்களில் உள்ள வாசகம் :

ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி

ஸதியபுதோ" என்பது "அதியந் நெடுமாந் அஞ்சி" என்கிறார் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

தென்னார்காடு மாவட்டத்தில் திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் உள்ளது. இவ்வூரை திருவண்ணாமலையிலிருந்து (30 கி.மீ) சென்றடையலாம். இவ்வூர் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.

No comments:

Post a Comment