பவள சங்கரி
மலரென உதித்து மலையென உயர்ந்து தீயெனக் கொதித்து
மதியெலாம் நிறைந்து மயானத்தில் உறைந்து மாசில்லாத
மயான சயனியாய் மாசாணியாய் உப்பாற்றங்கரையில்
மங்கலநாயகியாய் மகிழ்ந்தருளும் மகிசாசுரமர்த்தனியே! போற்றி!
வான்நோக்கிய கரமிரண்டும் மலர்மஞ்சளுடன் மங்கலமாய்
மண்நோக்கிய கரமிரண்டும் சூலமும் முரசும் அரவமுடன்
மண்டையோடும் தாங்கி தவிப்போருக்கு அபயம் அளிக்கும்
வற்றாத சீவநதியாய் வரமளிக்கும் வடிவுடை நாயகியே போற்றி!