Showing posts with label அமெரிக்கப் பயண அனுபவம். Show all posts
Showing posts with label அமெரிக்கப் பயண அனுபவம். Show all posts

Thursday, May 2, 2019

சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!



எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா
சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.
Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.

1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.

தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.
ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.

சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.
வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.
சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:
அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.

இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

Friday, March 20, 2015

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ மேடை!



இனிய வணக்கம் நண்பர்களே



சமீபத்தில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உலகப் புகழ் பெற்ற, நம் இந்தியாவை உலக மேடையில் பிரகாசிக்கச் செய்த உரை நிகழ்ந்த இடத்தைப் பார்க்க சென்றபோது அவருடைய சுவாசம் அங்கும் உலவுவதை உணர முடிந்தது என் ஆழ்ந்த ஈடுபாடு கூட காரணமாகவும் இருக்கலாமோ.. நம்பிக்கைதானே வாழ்க்கை.. 

Monday, December 22, 2014

இதயமே ..... இதயமே................





இனிய வணக்கம் நண்பர்களே!


ஒருவரின் இதயம் மற்றும் மனதைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், அவர் ஏற்கனவே சாதித்ததைப் பார்க்காமல், எதைச் சாதிக்க விழைகிறார் என்று பாருங்கள் - கலீல் கிப்ரான்


Thursday, December 18, 2014

உடலும், மனமும் இணையும் தருணம்!



பவள சங்கரி



இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை.   யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும்  ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம்  நம்மை நாமே உணரச் செய்கிறது.  மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.  சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம்  பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம்,  ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு  ஆயுளும் கூடும். 
ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை  கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும்.  நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். 


5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது. 

ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட  சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை  நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.

Sunday, November 30, 2014

PRINCETON UNIVERSITY CHAPEL - பிரின்ஸ்டன் பல்கலைக்கழக தேவாலயம்


பவள சங்கரி


1920 இல் தீக்கிறையான மார்க்வாண்ட் தேவாலயத்திற்குப் பதிலாக இரண்டு மில்லியன் டாலர் செலவில் 1928ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேவாலயம் இது. அதிகரித்துவரும் பன்முகக் கலாச்சார பூமியான அமெரிக்காவில் கிருத்துவ மதப் பாரம்பரியம் காக்கப்படவேண்டி, பல்கலைக்கழகத் தலைவர் ஜான் கிரையர் ஹிப்பென் என்பவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதினாலாம் நூற்றாண்டின் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிற வகையில் சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 



மதரீதியான கிருத்துவ சேவை ஞாயிறு காலை 11 மணிக்கும், கோடைக்காலங்களில் மட்டும் 10 மணிக்கும் நடக்கிறது. வருடந்தோறும் பல்கலைக்கழகத்தாரின் இறந்தநாள் நினைவு தினமும் நடத்தப்படுகிறது. 1200 பேர்கள் அமரக்கூடிய இந்த தேவாலயத்தில் திருமணம், பெயர் சூட்டுவிழா, ஞானஸ்தானம், எழுச்சி நாள், இறுதிச் சடங்கு என அனைத்தும் கொண்டாடப்படுகிறது. மிக முக்கியமான அறிவிப்புகளுக்காகவும் இங்கு கூடுகிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் இறப்பு மற்றும் 9 - 11 சோக நிகழ்ச்சி (இரட்டைக் கட்டிடத் தகர்ப்பு) ஆகியவைகளுக்காக கூட்டப்பட்டிருக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தியானத்திற்காக தேவாலயம் திறந்திருக்கிறது. கோடைக்காலத்தில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படுகிறது.

Sunday, November 23, 2014

Bridgewater Sri Venkateswara Temple - New Jersey



பவள சங்கரி



ஸ்ரீ வெங்கடேசுவரா ஆலயம், மிக அழகாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிற கோவில் . சென்ற இரண்டு பத்தாண்டுகளில் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஆலயம்.

Monday, November 17, 2014

ஸ்ரீவெங்கடேசுவரா ஆலயம்


பவள சங்கரி


இரண்டு நாட்களாக உறையும் குளிரில் ஓயாத பயணம்.. சிகாகோ மாநிலம் பனி மழையில் நனைய ஆரம்பித்துவிட்டது. -4 டிகிரி செண்டிகிரேட். 


Wednesday, November 12, 2014

ஆட்டிசம்

பவள சங்கரி


குழந்தைகளை ஆட்டிப்படைக்கும், ‘ஆட்டிசம்’ என்ற கொடிய நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நானும் ஏற்கனவே இதுபற்றி இங்கேயும் விவாதித்திருக்கிறேன். இன்றும் சொல்லுமளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அதிகமான பாதிப்பே உள்ளது. பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் குறித்த விரிவான என் கட்டுரை இதோ இங்கே ..http://coralsri.blogspot.com/2012/08/blog-post_27.html

St. Louis - America

பவள சங்கரி


Sunday, November 2, 2014

THE IOWA STATE CAPITOL

பவள சங்கரி

நூறாண்டிற்கும் மேலாக ஐயோவா மாநிலத் தலைநகரின் அரசாங்கம் மற்றும் அரசியல் அடையாளச் சின்னமாக விளங்குவது, 275 அடி உயரமுள்ள, 23 கேரட் தங்கத்திலான குவிமாடத்துடனான கட்டிடமே. குவிமாடத்தின் மீதிருக்கும் 250,000 தங்க இலைகள் ஒரு அங்குலம் தடிமனே உடையது. 1871ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு1886இல் தான் முடிவடைந்திருக்கிறது. செங்கல், சுண்ணாம்புக்கல், கிரானைட் மற்றும் மணற்கற்கள் மூலம் கட்டப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து, தெற்காக 363 அடியும், 8 அங்குலமும், கிழக்கிலிருந்து மேற்காக 246 அடி, 11 அங்குலமும் கொண்டதாகும். இடையில் 
1904ம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1998இல் துவங்கி, 1999இல் 400,000 டாலர் செலவில் கட்டி முடித்திருக்கிறார்கள். அற்புதமான, ஓவியங்கள், மரச்சிற்பங்கள், சுவர் அலங்காரங்கள், உட்கூரை வண்ணங்கள் கண்ணைப்பறிப்பதாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Wednesday, October 29, 2014

தீபாவளிக் கொண்டாட்டம் + ஆப்பிள் எடுத்தல்


அந்நிய மண்ணில் இந்திய ஒருமைப்பாடும், தீபாவளிக் கொண்டாட்டங்களும்.... நம்ம வீட்டு தீபாவளி!

Monday, October 27, 2014

SCIENCE CENTRE OF IOWA - அமெரிக்கா


நேற்று SCIENCE CENTRE OF IOWA சென்றிருந்தோம்.. என்ன ஒரு ஆச்சரியம்.. அங்கு நம் நடராசர் சிலையும், சூரியனார் சிலையும் லார்ட் சிவா என்ற தலைப்பிலேயே இருக்கிறது. இங்கு குழந்தைகளை அறிவியல் துறையில் ஈடுபடுத்தி பின்னாளில் அவர்கள் விஞ்ஞானிகள் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தைகள் தாங்களே அதை செயல்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். தண்ணீரிலிருந்து மின்சாரம் எடுப்பதைக்கூட இயல்பாக அமைத்துள்ளனர். ராக்கெட் செய்து அனுப்பும் முறை, மற்றும் ராக்கெட் தரையிறங்கும் விதத்தையும் எளிதில் புரியும் வண்ணம் அமைத்துள்ளனர். வானியல் துறையில் கோளரங்கங்களும், உயிரியல் துறையில் டைனோசர் எலும்புக்கூடும் பிரம்மாண்டமாக வைத்துள்ளனர்.. அந்தப் படங்கள் விரைவில் பகிர்வேன்....;-))

Saturday, October 25, 2014

கற்பனைக்கெட்டாத அற்புதக்காட்சி


பவள சங்கரி

இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வித்தியாசப்பட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுக்கும் அவைகள் நம்மை பிரமிக்கச் செய்வன. விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், மெய்ஞ்ஞானமும் அமைதியாக தம் பங்கைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ காணமுடிகிறது. இதுவே மனிதர்களின் அத்துமீறல்களின் எல்லைக்கோடுகளாகவும் ஆகிவிடுகிறது. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் உலகம் முழுவதற்குமான அந்த பொதுவான சக்தி ஒன்றேதான் அல்லவா.. நம் இந்துக்களின் மகத்தான மாபெரும் சக்தி என்றும், வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசனம் பெறவேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தக்கூடியதுமான அந்த ஒன்று திருக்கயிலாயம். மெய்மறக்கச் செய்யும் அச்சுகானுபவம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.

Monday, October 20, 2014

ST. LOUIS ARCH - U.S.A.


Happy Diwali !! Hope everybody may be enjoying Deepavali. 
St. Louis Arch is really amazing Mechanical Engineering Marvellous!! Likewise the Museum! Worth spending time and money for visiting this wonderful place , which is the gateway of Western Regions of America! Will add more valuable details about this soon...


Saturday, October 4, 2014

ஹாங்க் காங்க் விமான நிலையம்


ஹாங்க் காங்க் , சீனப்பேரரசின் ஆளுமையின் கீழ் சில புரிந்துணர்வுகளுடன் ஏற்பட்ட ஆட்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து சுமாராக 4000 மைல் தொலைவில் உள்ளது. உலக வணிகத் தலை நகரங்களின் ஒன்றாகக் கருதப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது... அனைத்து வகையான மக்களும், அமைதியுடனும், செழிப்புடனும் வாழ்ந்த காலங்கள் போக, இன்று சுதந்திர வேட்கையுடன் கூடிய மக்கள் ஒரு புறமும், அதற்கு எதிர்ப்பாக ஒரு பிரிவினரும், கலவரம் உணர்வுகொண்டு, பௌத்த கொள்கைகளின்படி அமைதியுடன் வாழ்ந்த காலங்கள் மாறிவரும் நிலை ஏற்படுள்ளது. 99 ஆண்டுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தபோது பொருளாதார வளர்ச்சியடைந்த இந்த மண் அவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சீனப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. சுதந்ததிரமாகத் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தணியாத தாகத்தினால், காந்தி கண்ட சுயராச்சியம் என்ற உணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, இன்று வீதிகளில், பல ஆயிரம் மக்கள் இறங்கி போரிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருத்து ஏற்புடையதோ அல்லவோ, என்றாலும் காந்திய வழியில் போராடுவது பாராட்டிற்குரியது. வானும், மண்ணும், கடலும், மலையும் இணைந்து வளம் கொழிப்பாதாக் இருக்கும் இந்த பூமி என்றென்றும் வளத்துடன் வாழ வாழ்த்துவோம்.. இதோ சற்று முன் எடுத்த சில புகைப்படங்கள்.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...