Saturday, October 25, 2014

கற்பனைக்கெட்டாத அற்புதக்காட்சி


பவள சங்கரி

இறைவனின் படைப்பில் எத்தனையோ விநோதங்கள்! நாட்டுக்கு நாடு அது சற்று வித்தியாசப்பட்டாலும், நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி, தம் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நம்மைக் கவர்ந்திழுக்கும் அவைகள் நம்மை பிரமிக்கச் செய்வன. விஞ்ஞானம் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்தாலும், மெய்ஞ்ஞானமும் அமைதியாக தம் பங்கைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ காணமுடிகிறது. இதுவே மனிதர்களின் அத்துமீறல்களின் எல்லைக்கோடுகளாகவும் ஆகிவிடுகிறது. நாட்டுக்கு நாடு, மனிதர்களும், மதங்களும், சட்ட திட்டங்களும், கலாச்சாரமும், பண்பாடும் மாறலாம். ஆனால் உலகம் முழுவதற்குமான அந்த பொதுவான சக்தி ஒன்றேதான் அல்லவா.. நம் இந்துக்களின் மகத்தான மாபெரும் சக்தி என்றும், வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசனம் பெறவேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தக்கூடியதுமான அந்த ஒன்று திருக்கயிலாயம். மெய்மறக்கச் செய்யும் அச்சுகானுபவம் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.


சமீபத்தில் அப்படி ஒரு அனுபவம், அமெரிக்காவின், ‘மெராமெக் குகையை (MERAMEC CAVERNS)க் கண்டபோது ஏற்பட்டது உண்மை. 


மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப்பகுதியே குகை என்று அறியப்படுகிறது. கற்காலங்களில் இதுபோன்ற குகைகளே மனிதர்களின் வசிப்பிடமாக இருந்திருக்கிறது. இன்றும்கூட ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான பல குகைகள் நம் இந்தியாவிலும் காணப்படுகிறது. மேகாலயா மாநிலத்தின் ஜெயிண்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரேம் லியாத் ப்ராஹ் என்ற குகை 31 கி.மீ நீளம் கொண்ட இது இந்தியாவின் மிக நீளக் குகையாகக் கருதப்படுகிறது. அதே போல் இந்த மெராமெக் குகை லெஸ்டர் பி. தில் என்ற குகை ஆய்வாளர் 1935 இல் ஐந்து மேற்படிவமும், 26 மைல் நீளமும் உடையதைக் கண்டுபிடித்தார். 1933 இலிருந்து பொதுமக்களின் சுற்றுலா தளமாகியுள்ளது.


கசித்துளி படிவுகள், சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் போன்றவற்றால் ஆன இக்குகை வரலாற்று முக்கியமும், திகிலும் நிறைந்த அனுபவம் அளிப்பது. இங்கு மிக அதிகப்படியான தாதுப்பொருட்களின் படிமம், 70 அடி உயரமும், 60 அடி அகலமும் மற்றும் 35 அடி தடிமனும் கொண்ட இதுவே இக்குகையின் மகுடமாகத் திகழ்வது. இதுவே அமெரிக்க நகரத்தின் முதல்தர குகைக்காட்சியாகும்.




1874ம் ஆண்டில், கேட்ஷில் என்னும் இடத்தில் ஒரு இரயில் கொள்ளைக்குப் பிறகு, மோ, ஜெஸ்ஸி ஜேம்ஸ் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் இந்தக் குகையில் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.தேனிலவு இணைகளுக்கான அழகான சிறு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.. ஆக வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு அதிசயக் காட்சி!!



No comments:

Post a Comment