Saturday, August 30, 2014
Monday, August 25, 2014
நட்பு!
இரு நண்பர்கள் பற்றிய ஒரு ஜென் கதை...
ஒரு பாலைவனத்தின் மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள், இரு நண்பர்களும். நடக்கும் களைப்பு தீர கதை பேசிக்கொண்டே சென்றார்கள். பேச்சுவாக்கில் விவாதம் ஒன்று முளைத்தது. எதிர் வாதத்தினால் வாய்ச் சண்டையாகவும் மாறிவிட்டது. கோபம் தாளாத ஒரு நண்பன், மற்றொருவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்.
அறை வாங்கியவனோ சற்றும் கோபிக்காமல், மிக அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்ததோடு, தன் விரல்களால், “எனதருமை நண்பன், என் உயிரினும் மேலானவன், இன்று என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” என்று மணலில் எழுதினான்.
Sunday, August 24, 2014
சர்வதேச மகளிர் தொழில் முனைவர் மாநாடு
பவள சங்கரி
எஸ்.எஸ்.எம். குழும கல்லூரிகளின் சார்பில், ஆகஸ்ட் 22 & 23 (2014) ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடந்தேறியுள்ளது, சர்வதேசப் பெண்கள் தொழில் முனைவோர் மாநாடு. இதில் கலந்து கொண்ட மாணவிகளும், தொழிலதிபர்களும் மிக உற்சாகமாக, மன நிறைவுடன் கருத்தளித்துள்ளது இம்மாநாட்டின் முழுமையான வெற்றியை பறை சாற்றுகிறது. நேற்று (23, ஆகஸ்ட்) நிறைவுப் பகுதியில் என்னைப் பேச வாய்ப்பளித்த, கல்லூரித் தலைவர் திரு கவாலியர் டாக்டர் எம்.எஸ். மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த நிகழ்ச்சி இத்துனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பக்கத் துணையாக இருந்த பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ். பாலமோகன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர், டாக்டர் கே. ராமசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், முனைவர் டாக்டர். பி. கிருஷ்ண குமார், முனைவர், எம். இந்துமதி, முனைவர் ஜெ.எஸ். சுபாஷிணி, திரு என். நாராயண ராவ், திட்டப்பணித் தலைவர் முனைவர் ஜெ. மோகன்ராஜ், மற்றும் முனைவர் எஸ்தர், நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கிய எம். பி. ஏ. மாணவிகள், பங்கு பெற்ற அனைத்து ஏனைய பேராசிரியர்கள், தொழில் முனைவோர், பேச்சாளர்கள் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள்.
இந்த நிகழ்ச்சியின் வரவேற்பைப் பார்த்தவுடன், உண்மையில் பாரதி கண்ட கனவு பலிக்க வெகு தொலைவு பயணிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. நன்றி திரு மதிவாணன் சார்.
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...