Posts

Showing posts from May 13, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (5)

20ம் நூற்றாண்டில் பெண்ணிய இயக்கங்கள் நாட்டின் பல பாகங்களிலும், உயர்வான நிலையில்,உறுதி வாய்ந்ததாகவும், அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலுமே பரவிக்கிடக்கிறது..
உலக அரங்கில் இந்திய பெண்களின் நிலையில் இரு முரண்பாடான கோணங்களிலான பார்வையே இருக்கிறது. அதாவது ஒரு கோணத்தில் இந்திய பெண்கள் சுதந்திரப் பறவைகளாகவும், மற்றொரு கோணத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் நோக்கம் கொண்டதாக இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 18 ஆண்டுகள் ஒரு பெண் பிரதமர் பதவி வகித்த காலத்திலேயே அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிறைய நடந்து கொண்டுதானிருந்தன. நூற்றுக்கணக்கான பெண்கள் மும்பை போன்ற பெரு நகரங்களில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், செவிலியர்கள் , விஞ்ஞானிகள் என்று பதவியேற்றிருந்தாலும், அந்நாளைய செய்தித்தாள்கள், பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், கொலை போன்ற பல குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டுதான் இருந்தன.. மிக உயரிய பதவிகளில் அலங்கரிக்கும் வாய்ப்பு பெற்றாலும், இது போன்ற வன்முறைகளால் அலைக்கழிக்கப்படதும் மிக சிக்கலான இருமுனைப் போராட்டமாகவே இருந்தது…

வசந்தமே வருக!

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella, r for red u for umbrellaa, 'm' as in maddy ) இப்படி ஒவ்வொரு எழுத்தையும் சொல்லி அதற்கு ஒரு உதாரணமும் சொல்லி, முழு பெயரையும் விளங்க வைப்பதற்குள் அவள் படும்பாடு சொல்லி முடியாது. சரி அவள் பிறந்த குடும்பம் சாமான்யமான குடும்பமா, தாத்தாவோ பெரும் தமிழ் ஆர்வலர், அப்பா சைவ சமய பேச்சாளி, அத்தை சிறந்த தமிழ் அறிஞர், இப்படி குடும்பமே தமிழ் ஆர்வலராக இருக்கும் போது அம்மாவே இவர்களிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு சொல்லி முடியாது. அவர்கள் வைக்கும் பெயர் மட்டும் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும்.....இன்று எப்படியும் அம்மாவிற்கு ஒரு முடிவு சொல்லியாக வேண்டும். திரும…

உம் கருவறையே எம் கல்லறையாய்!

Image
ஒரு கூட்டுக் கிளியாக ஒரு சோலை மலராக
பழமுதிர்ச்சோலைதனில் குளுமையாய் கூடிக்களித்திருந்த காலம்
ராகம் சரியானதுதான் தாளம்தான் தப்பானது.
பிரியாத வரம் வேண்டி பொய்யாக கவி பாடினேன்
சலியாத மனம் நாடி சத்தியமாய் தவமிருந்தேன்
ப்ழியும் பாவமும் பரிவோடு முழியும் நகையும் கனிவோடு
வெட்கமும் துக்கமும் துணையாக வெறியோடு கதைபல படித்தேன்
பரிபாடலும் சங்கப்பாடலும் சங்கமிக்கும் கலையும் கருத்தாய் நாடகமாடினேன்
சொற்சுவையும் பொருட்சுவையும் சேர்த்தே சமைத்தேன் சத்தான இலக்கியத்தை
தீதும் நன்றும் பிறர்தர வாராது மோதும் முடிவும் முனைந்தேன்
கல்லைக் கனியாக்கும் சொல்லை பல்லைக் காட்டிப் பரிசளித்தேன்
பரிசும் பாராட்டும் தாராளமாய் பகிர்ந்தளித்தேன் பசப்பு வார்த்தைகளினூடே
பட்டையும் பகட்டையும் பாந்தமாய் பரப்பினேன் பாசமெனும் பகடையாய்
கருவும் உருவும் ஈந்தாய் வேரும் விழுதும் விருட்சமாய்
தாலாட்டும் தனிப்பாட்டும் அளித்தேன் தங்கமான என் செல்லச்சிட்டுக்கு
பாசமும் நேசமும் பன்மடங்காய் பகிராமல் பெருகியது பதவிசாய்
சிறகுவிரித்து கூட்டைப் பிரிந்து இடம்பெயர்வின் இனிய தருணம்
சுயமும் சுகமும் சுவையாய் படர்ந்த விருட்சமே உறவாய்
பாசப்பங்கீட்டில் நே…