Saturday, July 16, 2011

வர்ண சாலங்கள்!


வண்ணங்கள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மங்களமாம் ஒரு மஞ்சள்
அமைதிக்கு ஒரு வெண்மை
பசுமைக்கு ஒரு பச்சை
வீரத்திற்கு ஒரு செம்மை
அழகுக்கு ஒரு ரோசாவண்ணம்
வண்ணங்களையும் எண்ணங்களையும்
தாங்கிநிற்கும் தங்கமண்
கலவையாய் ஒரு கற்பகத்தரு!

பச்சைக் கிளி



அழகிய மலர்வனத்தில்
அன்பே உருவாய்
ஒரு பச்சைக்கிளியாம்

வணணக் கலவையைக்
கட்டித் தழுவியே
வானவில்லானதுவாம்!

அங்கே தேடிவந்ததுவாம்
இணைப் புள்ளும்
காணாமல் சோர்ந்தேபோனதாம்!

மாலையானதும் வாடிப்போனதாம்
வண்ணங்களும் மாறிப்போனதாம்
தேடிவந்த இணையும் களிப்பானதாம்!

உன்னையறிந்தால்............

Rudyard Kipling

IF

IF you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you,
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or being lied about, don't deal in lies,
Or being hated, don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise:
If you can dream - and not make dreams your master;
If you can think - and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build 'em up with worn-out tools:

If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: 'Hold on!'

If you can talk with crowds and keep your virtue,
' Or walk with Kings - nor lose the common touch,
if neither foes nor loving friends can hurt you,
If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run,
Yours is the Earth and everything that's in it,
And - which is more - you'll be a Man, my son!



உன்னையறிந்தால்..........

உன்னைப்பற்றிய அனைத்து வாதத்திற்கும் தலை நிமிர்ந்தே இருக்க முடியுமானால்
தாங்கள் இழந்தவற்றிற்கும் உன் மேல் குற்றம் சுமத்துவோர்,
அனைத்து மானுடரும் உன்னை சந்தேகித்தாலும் உன்னையே நீ நம்புவதோடு
அவர்களுடைய சந்தேகங்களுக்கு வெகுமதியும் அளித்துவிட்டு
உன்னால் காத்திருக்க முடியுமானால், காத்திருப்பதில் சோர்ந்து போகாதிருந்தால்,
பொய்யுரைக்கப்பட்டிருந்தாலும், பொய்களுக்காக வாதிடாமல்,
அல்லது வெறுக்கப்பட்டிருந்தாலும், வெறுப்பதற்கான வழியமைத்துக் கொடுக்காமல்,
அதிக நன்மையை நாடாமல், மிக விவேகமாக உரையாட முயலாமல்.
நீ காணும் கனவே உனக்கு எசமானர் ஆகாமல,
வெற்றியையும் தோல்வியையும் சந்திக்க நேரும் போது
நிலையற்ற அந்த இரண்டையும் சமமாகப் பாவிக்க முடிந்தால்,
நீ பேசும் உண்மையை உன்னால் பொறுமையுடன் கேட்க முடிந்தால்
வீணர்களால் திரிக்கப்பட்ட அறிவிலிகளுக்கான வலையில் சிக்காமல
உன் வாழ்க்கை ஆதாரத்தைக் கவனம் கொண்டு,உறுவிழந்த
மற்றும் சரிந்து போனவைகளை மீந்த பாகங்கள் கொண்டு செப்பனிடு.


உன் அனைத்து வெற்றிகளையும் ஒரு குவியலாக்க உன்னால் முடிந்தால்
ஒரே திருப்பத்தில் காற்றில் தூக்கி வீசும் துணிச்சலையும் கொண்டால்,
இழந்ததை, திரும்பவும் உன் ஆரம்பத்தில் துவங்கு
உன் இழப்பை ஒரு போதும் ஒரு வார்த்தையேனும் மூச்சு விடாதே,
உன் இதயத்திற்கு துணிச்சலும், வலிமையும் சேர்க்க முடிந்தால்
அனைத்தும் மறைந்த பின்பும் தொடர்ந்து உன் திருப்பங்களுக்காகச் சேவை செய்வாயானால்
“மன உறுதி ” என்ற தாரக மந்திரம் தவிர
உன்னுள் ஒன்றுமில்லையென்பதை கருத்தில் கொள்.


நற்பண்புகளுடன் மக்களின் கூட்டங்களில் உன்னால் உரையாட முடிந்தால்
அல்லது உன் சாமான்யத்தை இழக்காமல் அரசனுடன் நடைபயில முடிந்தால்
நணபர்களின் அன்போ அல்லது பகைவர்களின் துரோகமோ எதுவும் உன்னை நோகடிக்காமல் இருக்க முடிந்தால்,
அனைவரும் உன்னை கணக்கில் கொண்டாலும் எவரும் அளவிற்கதிகமாக நெருங்காமல் இருந்தால்,
உன்னுடைய மன்னிக்க முடியாத பொழுதை
அறுபது நொடிப் பொழுதேயான தொலைவாகக கட்டுப்படுத்திக் கொண்டால்,
இந்த உலகமும் மற்றும் அதிலுள்ள அனைத்தும் உனக்கே சொந்தம்,
அதனினும் மேலாக - நீ ஒரு மனிதனாக இருப்பாய், என் மகனே!


Monday, July 11, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (17)

பவள சங்கரி
கொட்டும் பனியின் வெட வெடக்கும் குளிரும், ஆளையே அசத்தும் பனிப் புயற் காற்றும் எல்லாம் ஓய்ந்து சுகமான வசந்த காலம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தும் பசுமையான புல் வெளிகளில் அழகிய புள்ளினங்களின் சுகமான ராகங்கள்! புதிய மலர்கள் புத்துணர்வுடன் துளிர்க்கும் அழகு! வ்சந்தம் மலர்ந்ததை பறைசாற்றும் டேஃபோடில் மற்றும் அரோரா மலர்களின் அணி வகுப்பு. வசந்த காலப் பறவைகளின் இன்ப நாதம். இயற்கையின் இந்த இன்பத்தை அனுபவிக்கத் தயாராகும் மக்கள், உலகிலேயே தாங்கள்தான் மிக மகிழ்ச்சியான மனிதர்கள், சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள் என்ற பெருமிதம் பொங்க வளைய வருவதைக் காண ஆசரியம்தான் அவந்திகாவிற்கு. இத்தனை அழகையும் எப்படியும் தன் தூரிகையில் கட்டி வைத்து விட வேண்டுமென்ற துடிப்பு. அதிகாலையிலேயே எழுந்து விட்டாள். அருகில் ரம்யா, அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள உறக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். அங்குதான் வசந்த விழாவைக் கண் குளிரக் கண்டாள்.





தினமும் காலையில் பிரட்டும், ஜெல்லியும் சாப்பிட்டு அலுத்துப் போன வாய்க்கு, ஏதேனும் சுவையாக சாப்பிடலாம் என்று தோன்றியது. சனிக்கிழமை, விடுமுறை நாளானதால் இன்று ஏன் தானே சமைக்கக் கூடாது என்ற யோசனை வந்தது. சமையலில் பெரிய திறமைசாலி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே சமைப்பாள். ரம்யா எழுந்திருப்பதற்குள் ஏதாவது சமைத்து அவளை அசத்த வேண்டும் என்ற முடிவுடன் பூனை போல மெதுவாக உள்ளே நுழைந்தாள். மளமளவென இருக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு பாலக் பன்னீரும், சப்பாத்தியும், செய்து முடித்தும், ரம்யா எழுந்த பாடில்லை. அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் அம்மாவிற்கு போன் செய்யலாம் என்று முடிவு செய்த அதே நேரம் ரம்யாவின் அலைபேசி சிணுங்கியது.

ரம்யா, நெளிந்து கொண்டே, “அவந்திகா, அந்த போனை எடுத்து யாராயிருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பேசச் சொல்லேன்…. ப்ளீஸ் “ , என்றாள்.
”ஹலோ”
“ ஹலோ, ரம்யா எழுந்திருக்கலையாம்மா…” ரம்யாவின் அம்மா பேசினார்கள்.
“ஹலோ ….இன்னும் இல்லை அம்மா. நல்லா தூங்கிட்டு இருக்காங்க. ஏதாவது முக்கியமா இருந்தா எழுப்பட்டுமா..”
“இல்லம்மா. அவசரமில்ல. எழுந்தப்புறம் பேசச் சொல்லும்மா.நீ நலமாக இருக்கிறாயா..”
“ஆம் அம்மா. நலமாக இருக்கிறேன். அப்பா, தம்பி அனைவரும் நலம்தானே…”?
“எல்லோரும் நலம் தான் அம்மா. சரி பிறகு பேசலாம். வச்சுடவா”

ரம்யாவை எழுப்பலாம் என்று அவந்திகாவிற்கு தோன்றினாலும் அவள் அசந்து தூங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் விட்டு விட்டாள். அது மட்டுமல்லாமல் இரவு வேகு நேரம் பாட்டு கேட்டுக் கொண்டு நேரம் கழித்து தான் உறங்கச் சென்றிருப்பாள். அன்று அருகிலிருக்கும் பிரிட்ஜ் வாட்டர் கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறியிருந்தாள். எழுந்தவுடன் தான் கிளம்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

தன் ஓவியக் கண்காட்சி தொடர்பாக ஒரு சிலரைச் சென்று சந்திக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதற்கும் ரம்யாவைத் தொந்திரவு செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


வீட்டின் பின் வாசலில் அடர்ந்த மரங்களும் கீச்சிடும் புள்ளினக் கூட்டங்களும், குட்டிப் பூனை அளவிலான கொழு கொழுவென்ற அணில்களும் துள்ளி விளையாடுவதை சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அடுத்த வீட்டில் ஒரு பாட்டி, ஈழத்து தமிழர் போல இருந்தவர், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அழகான சிறிய தொட்டிகளில் செடிகள் அப்போது தான் துளிர் விட்டிருந்தன. இந்த பாட்டி தள்ளாத வயதில் இத்தனை சிரமப்பட்டு இந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமா என்று எண்ணிய போதுதான், தன்னுடைய அம்மா தனக்குச் சொன்ன ஒரு ஜென் கதை அவளுக்கு நினைவிற்கு வந்தது.

ஒரு துறவி, முதுமையின் எல்லையில் இருப்பவர் தன் மடத்தின் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு வெகு சிரமப்பட்டு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்த சிறுவன் ஒருவன்,

“ ஏன் ஐயா இவ்வளவு தள்ளாத பருவத்திலும், இத்தனை சிரமப்பட்டு இப்படி நீர் பாய்ச்ச வேண்டுமா. இந்த மரம் பலன் தரும் வரை தாங்கள் இருக்கப் போகிறீர்களா. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பராமரிப்பு அவசியமா” என்று கேட்க,

அதற்கு அந்தத் துறவி, “ மகனே, என் மூதாதையர் இது போல எண்ணியிருந்தால் இன்று நான் அந்த மரங்களின் பலனை அனுபவிக்க முடியுமா? அதுதான் நிதர்சனம். இன்று நான் பராமரிக்கும் மரங்களின் பலனை நாளை நீங்கள் அனுபவிக்கலாமே. இதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை. நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து போன்றது” என்றார்.
அந்தப் பாட்டியைப் பார்த்தவுடன் அவளுக்கு அந்த ஜென் துறவி நினைவுதான் வந்தது. காரணம் ரம்யா ஏற்கனவே அவரைப் பற்றிக் கூறியிருந்த விசயம் தான். ஆம் அந்தப் பாட்டியின் கணவர் நோய்வாய்ப்பட்டு பல மாதங்களாகப் படுக்கையுடன் இருப்பவர். அவருக்கு அத்துனை பணிவிடைகளும் பார்த்துப் பார்த்து தானே செய்ததோடு,சில வாரங்கள் முன்பு அவர் இறந்த போது சற்றும் கலங்காமல், பிலடெல்பியாவில் இருக்கும் தன் மகளுக்குத் தெரியப்படுத்தி விட்டு அவர் வந்து சேருவதற்குள் ஆம்புலன்ஸ் மற்றும் சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடித்து வைத்ததோடு துளியும் கண்கள் கூடக் கலங்காமல் தைரியமாக எதிர் கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ரம்யா அவரிடம் துக்கம் விசாரிக்கச் சென்ற போது கூட அவர், தன் கணவர் பயன்படுத்திய புத்தக அறையிலிருந்து பேனா முதல் துணிமணிகள் வரை அத்துனையும் அப்படியே துளியும் இடம் கூட மாறாமல் பராமரித்து வைத்துக் கொண்டிருந்தாராம்.
மகள் தன்னுடன் வந்து தங்கும்படி வற்புறுத்திக் கூறியும், தன் இறுதிக் காலம் வரை தன் கணவர் வாழ்ந்த இடத்திலேயே தானும் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தும் விட்டிருக்கிறார். தனக்கு வேண்டிய காய்கறிகள், மற்ற பொருட்கள் என்று அனைத்தும் வாரத்தில் ஒரு நாள் தானே சிற்றுந்தை எடுத்துக் கொண்டுச் சென்று வாங்கி வந்து வைத்துக் கொண்டு ஒருவருக்கும் எந்த சிரமமும் கொடுக்காமல் தனியாக சமாளித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது அவந்திகாவிற்கு. நம்மூரில் முதுமை என்ற ஒன்றை வெகு சீக்கிரமே ஏற்றுக் கொள்வதோடு மனதளவில் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு உட்படுத்திக் கொள்வதையும் நினைத்து வருத்தமாகவும் இருந்தது.

வீட்டினுள் ஏதோ சலசலப்பு கேட்டவுடன் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டவள், ரம்யா எழுந்து விட்டது அறிந்து, அவளிடம் சென்று ரம்யாவின் தாய் அலை பேசியில் அழைத்த விவரம் கூற வேண்டும் என்று காத்திருந்தாள். அதற்குள் அவள் சமயலறையிலிருந்து வந்த நறுமணத்தை மோப்பம் பிடித்து,
“ ஆகா, அருமையாக இருக்கிறது அவந்திகா கிரேவி “ என்று நாக்கைச் சப்பு கொட்டிக் கொண்டே வந்தாள்.

அவந்திகாவும் சப்பாத்தி போடலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அதற்குள் ரம்யாவின் தாய் அழைத்திருந்த நினைவு வர,அவளைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

ரம்யாவும் சரி நான் அம்மாவிடம் பேசி விட்டு வருகிறேன். அதற்குள் நீ வேண்டுமானால் சப்பாத்தி முடிந்தால் செய்யலாம் என்றாள்.வெகு நேரம் ஆகியும் ரம்யா பேசி முடித்து வராததால் அவந்திகா சாப்பிட்டு முடித்து ரம்யாவிற்காக ஹாட் பேக்கில் சப்பாத்தி போட்டு மூடி வைத்து விட்டு வந்தாள்.

அவள் பேசி முடித்து அறையை விட்டு வெளியில் வந்த போது முகம் மிக வாட்டமாக இருந்தது. வழக்கமாக முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் தெளிவாக இருப்பவள் இன்று இப்படி இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. உடனே அவளிடம் காரணம் கேட்கவும் சங்கடமாக இருந்தது.

ஆனாலும் அவந்திகா அதைக் கண்டு கொள்ளாதவள் போல, அவளை சாப்பிட வரும்படி அழைத்துக் கொண்டிருந்தாள். ரம்யாவும் ஏதும் பேசாமல் அவளுடன் சமையலரைக்குச் சென்று ஒரு பீங்கான் தட்டில் இரண்டு சப்பாத்தியும் பன்னீர் கிரேவியும் வைத்துக் கொண்டு அதை வெளியில் எடுத்து வந்து தொலைக்காட்சி பெட்டியருகே நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவள் முகம் மேலும் வாட்டமாகவே இருப்பதைக் கவனித்த அவந்திகா ஏதும் கேட்பதா வேண்டாமா என்று யோசனையுடனே அவளைக் கவனிக்க, அதைப் புரிந்து கொண்ட ரம்யாவும், தன் தம்பியின் நிலை குறித்தும், அவனை ’சங்கல்ப் ’பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்காகவே பெங்களூருவிலிருந்து அவள் பெற்றோர் சென்னையில் வீடு எடுத்து தங்கியிருப்பதையும், தந்தை வியாபாரம் காரண்மாக சென்னைக்கும், பெங்களூருக்கும் அலைந்து கொண்டிருப்பது பற்றியும் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டாள். அவந்திகாவிற்கு என்னச் சொல்லி ரம்யாவைத் தேற்றுவது என்று தெரியவில்லை.
பாசம், பந்தம் இவையெல்லாம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தாலும் அதுதானே வாழ்க்கையாக இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவது சாமான்ய காரியமல்லவே. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு துன்பம் நேரும் போது தன்னையறியாமலே தன் மனம் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடிவதில்லையே. அப்படி முடியும் என்றால் அவர் தான் ஞானி அல்லவா. சிரிப்பும், கலாட்டாவுமாக பழகும் ரம்யாவிற்குள் இத்தனை சோகங்கள் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை அவந்திகாவால்…
தொடரும்.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...