பேரானந்தம்!
கண்களை மறைத்த என் காதலே
கூசச்செய்யும் அடர்ந்த ஒளி வெள்ளத்தினால்
சோற்வுற்றிருக்கும் என் கண்கள்
கானம் பாடி சோர்வுற்றிருக்கும்
என் அதரங்களை உன் முத்தத்தினால் அமைதியாக்கு.
ஓ என் காதலே!
என் ஆன்மாவின் தங்கலாகட்டும்.
மழையினால் தாக்கப்பட்ட ஒரு பரிதாபமான மென்மலரைப் போன்று
காதலின் சுமை தாளாமல் வேதனையால்
வளைந்த என் ஆன்மா
ஓ உம்முடைய முகத்தினுள் அடைக்கலமாகட்டும் அந்த ஆன்மா!
காதல் எனும் மாயை!
அனைவரும் சொல்வதுபோல் ,
நீ அன்புக்குரியவனாக இருக்கலாம்
ஒரு நிலையற்ற தீப்பொறியே இது
களிமண் வண்டலில் பொதிந்து மின்னும் சிறு கனல் --
இருண்ட என் மனமதை நித்தம் ஒளிரும்
அந்த பகலவனைக் கொண்டு
நீ ஒளிரச் செய்தாலும் - அக்கரையில்லை எனக்கு
அனைவரும் எண்ணுவது போல் ,
நீ காதலனாகவும் ஆகலாம்
கடலிலிருந்து - கடற்காற்று தூற்றிய
சாதாரண சிப்பியாகவும் இருக்க நேரிடலாம்,
ஆயினும் அழிவற்று நிலைத்து நிற்கும்
சூட்சுமமானதொரு முணுமுணுப்பு மட்டுமே.
மனிதனைப்போல அழியும் தன்மையதாக இருப்பினும் -
நீ மகிழ்ச்சியற்ற விடயம் மட்டுமே!
இறப்பை அழிக்கலாம் -
விதியையும் அழித்து விடலாம்
கடவுளின் இருப்பிடத்தையே
என் கண்முன் காட்சியாக்கினாலும்,
இருதயத்தினுள்ளே ஊடுறுவினாலும்கூட
சஞ்சலமேயில்லை எனக்கு!
Ecstasy
-- Cover mine eyes, O my Love!
Mine eyes that are weary of bliss
As of light that is poignant and strong
O silence my lips with a kiss,
My lips that are weary of song!
Shelter my soul, O my love!
My soul is bent low with the pain
And the burden of love, like the grace
Of a flower that is smitten with rain:
O shelter my soul from thy face!
The Illusion of Love
Beloved, you may be as all men say
Only a transient spark
Of flickering flame set in loam of clay –
I care not …since you kindle all my dark
With the immortal lustres of the day.
And as all men deem, dearest, you may be
Only a common shell
Chance-winnowed by the sea-winds from the sea –
The subtle murmurs of eternity.
And tho’ you are, like men or mortal race,
Only a hapless thing
That Death may mar and destiny efface –
I care not … since unto my heart you bring
The very vision of God’s dwelling-place.