Saturday, October 18, 2014

கவறு


பவள சங்கரி



சதாசர்வமும் உருண்டாலும் உதிருவதில்லை
வீழ்ந்தால் நிகழ்வாக - வீழாமல் கனவாக
விதைத்தவைகள் விதியென்னும் வீதியாய்
வெட்டும் விவேகமாய் வினையைச் சுமந்தபடி
ஆட்டமும் ஓட்டமும் நாட்டமுடன் நயத்துடன்
பாட்டமும் பட்டமும் பதவிசாய் பந்தமாய்
நேசமும் நிசமும் கடைச்சரக்கான கவறுக்காய்கள்!
நொறுங்கிப்போகும் கவறும்கூட  காவியமாகும்!!

ராமனுக்கொரு கவறு சீதைதானது!
ராவணனுக்கொரு கவறு சூர்ப்பனகை!
துரோணருக்கொரு கவறு ஏகலைவன்!
கவறுக்கொரு காவலரண் கவர்ந்தவருக்கே!
சொற்சதங்கைச் சொக்கட்டானின் கபடமன்றி
கற்றைக்கற்றையாய் கருத்துக்காட்சிகளின் வசீகரம்!
பொற்கைப் பாண்டியனின் எழுதுகோலின் களிநடனம்!
கவறுகள் உருண்டோடுமோசை புவிவிசையின் மெல்லிசை!!



ஒன்பதாம் தந்திரம் 17. மறைபொருட் கூற்று - பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம்





1 காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

 
2 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.

Sunday, October 12, 2014

சுதந்திரப்பள்ளு!





சுதந்திரப்பள்ளு! ஊருக்குகந்த பாடமதையள்ளு!
பாடும் புள்ளும்  ஊரும் தேனும் ஒன்றெனக்கொள்ளு!
ஓடிக்களைத்த ஒத்தைக் குயிலொன்னு
ஓயாமல் ஓசையெழுப்பியபடி
கூவிய மொழியெல்லாம் முச்சந்தியில்
முக்காடிட்டு முகம் புதைத்தபடி
தேடிய புள்ளின் கலங்கிய சித்தம்
பதறாமல் சிதறாமல் பறந்தபடி

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...