Monday, October 13, 2014

கூதாளிக்கால குதூகலம்!





அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அதாவது குளிர் அதிகமாக உள்ள நாடுகளில் ஒரு வருடத்தில் பருவங்கள் நான்கு முறை மாறுபடும். கோடை காலம் என்பது ஜூன் இருபதிலிருந்து செப்டம்பர் இருபது வரை. இங்கெல்லாம் பெரும்பாலும் குளிர் சாதனக் கருவி  இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் எரிசக்தியை அதிகமாக உபயோகித்து அமெரிக்கா பூமியின் வெப்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால்  இந்தியாவையும் சீனாவையையும் மட்டும்  குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறது..... :-)))  


கோடை காலம் முடியும் தறுவாயில் வெப்பம் கொஞ்சம் குறைந்து, அடுத்ததாக வருவது இலையுதிர் காலம்.  செப்டம்பர் இருபதிலிருந்து டிசம்பர் இருபது வரை தொடரும்.  அதிக வெப்பமும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான பருவம் இது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைந்து குளிர் ஆரம்பிக்கும். குளிர் அதிகமாக அதிகமாக, மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கும். ஆனால் அப்படி உதிர்வதற்கு முன்னால் ஒவ்வொரு வகையான மரங்களின் இலைகளும் ஒவ்வொரு வகையான வண்ணத்துடன் கண்ணைப் பறிக்கும் அழகு! பூந்தோட்டங்கள் போல் பல வகையான வண்ணங்கள்! மஞ்சள் வண்ணம், க்ரேன்பரி (cranberry - இது ஒரு வகையான பழம்) வண்ணம் என்று பல வண்ணங்கள் கண்ணைப் பறிக்கிறது! 



No comments:

Post a Comment