கவறு


பவள சங்கரிசதாசர்வமும் உருண்டாலும் உதிருவதில்லை
வீழ்ந்தால் நிகழ்வாக - வீழாமல் கனவாக
விதைத்தவைகள் விதியென்னும் வீதியாய்
வெட்டும் விவேகமாய் வினையைச் சுமந்தபடி
ஆட்டமும் ஓட்டமும் நாட்டமுடன் நயத்துடன்
பாட்டமும் பட்டமும் பதவிசாய் பந்தமாய்
நேசமும் நிசமும் கடைச்சரக்கான கவறுக்காய்கள்!
நொறுங்கிப்போகும் கவறும்கூட  காவியமாகும்!!

ராமனுக்கொரு கவறு சீதைதானது!
ராவணனுக்கொரு கவறு சூர்ப்பனகை!
துரோணருக்கொரு கவறு ஏகலைவன்!
கவறுக்கொரு காவலரண் கவர்ந்தவருக்கே!
சொற்சதங்கைச் சொக்கட்டானின் கபடமன்றி
கற்றைக்கற்றையாய் கருத்துக்காட்சிகளின் வசீகரம்!
பொற்கைப் பாண்டியனின் எழுதுகோலின் களிநடனம்!
கவறுகள் உருண்டோடுமோசை புவிவிசையின் மெல்லிசை!!Comments