Saturday, July 16, 2016
Monday, July 11, 2016
Sunday, July 10, 2016
‘அப்பா’வின் அருமை - (திரை விமர்சனம்)
பவள சங்கரி
வழக்கமான காதல், டூயட், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள், இத்யாதி எதிர்பார்த்து ‘அப்பா’ திரைப்படம் செல்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சீராக உள்ளத்தை இறுக்கிப்பிடித்தபடி நகர்வதே இப்படத்தின் மாபெரும் வெற்றி எனலாம். கதை என்று பார்த்தால் நான்கு வரிகளில் சொல்லக்கூடிய சாதாரண கதைதான் என்றாலும் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார். வித்தியாசமான காட்சியமைப்பு, நவீன யுக்தி, தொழில்நுட்பம் என்ற எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமலே உள்ளத்தை நிறையச் செய்திருப்பதற்கும், இப்படி ஒரு அப்பா எல்லா குழந்தைகளுக்கும் வாய்த்தால் நாட்டின் எதிர்காலம் தலை நிமிர்ந்து நிற்கும் என்று இயல்பாக எண்ணத் தூண்டியதற்கும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுகள். ஒரே சமயத்தில் அப்பாவாகிற மூவர்களான சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன் ஆகியோரைச் சுற்றியே பின்னப்பட்ட கதைதான். தன்னுடைய ஆசைகள், கனவுகள் என அனைத்தையும் மகன் மீது திணிக்கும் அப்பா - தம்பி ராமையா, தாழ்வு மனப்பான்மையில் தானும் உழன்று தம் மகனுக்கும் அதையே ஊட்டி வளர்க்கும் அப்பா - நமோ நாராயணன் ஆகியோர் வளர்ப்பினால் ஏற்படும் அபத்தங்களும், ஒரு நல்ல அப்பாவான சமுத்திரக்கனி தன் குழந்தைக்குக் கொடுக்கும் சுதந்திரம், தனித்தன்மை, ஆகியவற்றின் மூலம் நல்ல வளர்ப்பு, தவறான வளர்ப்பு என்பதன் வேறுபாடுகளை வெகு இயல்பாக எந்த மேல்பூச்சோ, முகமூடியோ இல்லாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
என்னத்தச் சொல்ல?!
நேற்று எங்க ஊரூ அரசமரத்தடியில் இருவர் .....
அண்ணே.. அண்ணே.. நம்ம ஏரியாவுக்கு நான் இந்தக் ...... கட்சி மெம்பராயிட்டேனுங்க.. உங்களுக்கு ஏதாவது வேலையாவணும்னா வாங்கண்ணே...
அப்படியாப்பா.. நல்லது.. எம்புட்டு பணம் வரும் அத மொத சொல்லு.. எனக்கு எவ்ளோ வரும் அதையும் சொல்லு..
வரும்னே.. வந்தா நா யாருக்கு செய்யப்போறன்.. நானும் எங்கூட்டுக்காரியும்தான இருக்கோம்.. புள்ளையா குட்டியா...
அதுசரி. இப்போதைக்கு ஒரு பார்ட்டியாவது குடுக்கறியா அத சொல்லு முதல்ல..
கூடிய சீக்கிரம் என்னை மேயரா ஆக்கறதா (?!!!?) சொல்லியிருக்காங்க. அப்பறம் எல்லாம் நாமதான... பார்த்துக்கலாம்னே..
ஓ.. அது வேறய.. சொல்லவேயில்ல.. அது எப்போ..
ஆமாம்ணே.. (பாவம்.. வெக்க, வெக்கமா இருக்கும் போல.. அவ்ளோ நெளிவு)
சரிப்பா சொல்லு எப்ப பார்ட்டி
சரிண்ணே மெம்பர் கார்டு வரட்டும்ணே பார்ட்டி குடுத்தாப்போச்சு...
அடப்பாவி... அதுக்குள்ளயா இம்புட்டு பில்டப்பு...
பொது சனம் புலம்பல் - என்னப்பா நடக்குது இங்க.. மேயர் அப்படி என்ன எளப்ப சொளப்பமான பதவியா.. இப்புடி கூவி விப்பாய்ங்களா.... !ஒன்னுமே புரியல உலகத்துல...
Subscribe to:
Posts (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...