Thursday, March 31, 2016

சுட்டும் விழிச்சுடர்!பவள சங்கரி
‘மரணம் என்பது காலதேவனின் தண்டனை அல்ல. அது காலதேவனின் பரிசு’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு . இப்பூவுலகில் மனிதராய்ப் பிறந்த எவரும் ஓர்நாள் தம் உயிரை நீத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அது எப்படி, எந்தச் சூழலில் நிகழ்கிறது என்பதைப்பொறுத்தே அதன் தன்மை உள்ளது. தவிர்க்க வேண்டிய சூழலை தவிர்க்க மன ஆற்றலும், புத்திக் கூர்மையும், உள்ளத் தெளிவும், விழிப்புணர்வும் தேவை. இது தேவையான அந்த குறிப்பிட்ட சூழலில் புதிதாக முளைத்தெழுவது அல்ல. இளமை முதலே இரத்தம் ஊறும்போதே நம்முள் ஊறத்தொடங்கும் எண்ணவோட்டம் இது. அதனை மேலும் வலிமையூட்டுவது மட்டுமே நம் பணி. தம்மைத் தாமே வலிமையூட்டிக்கொள்ளும் பக்குவமும், வல்லமையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் இது கிடைத்தற்கரிய வரம். ஆனால் அந்த வரம் பெற்றவர் மட்டுமே வாழ்த்தகுதியானவரா என்றால் நிச்சயம் இல்லை. இந்த இடத்தில்தான் குருமார்கள், ஆசிரியர்கள், ஆன்றோர், சான்றோர், மூத்தோர் போன்றோரின் கடமைகள் இந்த சமுதாயத்தின் முக்கியத் தேவைகளாகிப்போகின்றன. ஆம் நம் சக மனிதர்கள் படும் துயரைக் கண்டு உள்ளம் பொங்கும் மனிதம் நிறைந்த எவரும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர தம்மால் இயன்றதைச் செய்யத் துடிப்பதும் நிதர்சனம். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அப்படி ஆடும்போது தம் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்த மனம் துடிக்கும்.

Wednesday, March 30, 2016

வேய்ங்குழல்வேதியரையும்  வசமாக்கிய  வேய்ங்குழல்
சுவாசக்காற்றை வாசமாக்கிய சுகந்தகுழல்
பேச்செலாம் சுடர்வீச்சாக்கிய செங்குழல்
சந்ததியெலாம் சாமரம்வீசும் சாகசக்குழல்
பந்தியில் பாயிரம்பாடும் பாமரக்குழல்
பரவசமாய் பகிர்ந்தளிக்கும் இன்குழல்
ஏக்கத்தையும் ஆக்கமாக்கும் ஏகாந்தக்குழல்
சுனாமியையும் சுருட்டும் சுவர்ணக்குழல்
பாசம் நேசம்  பாதகம் சாதகமென  
பகுத்தறியா கபடமில் கண்ணன்குழல்!
காலமெலாம் காதலிசைக்கும் மாயக்குழல்!!

சிலைவடித்த சிற்பி யாரோ?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செந்தில் குமரா!

Sunday, March 27, 2016

’தோன்றிற் புகழொடு தோன்றுக ’பவள சங்கரி

ஐயாவும், மகளும்
ஐயாவும், மகளும்

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
    நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
    டெல்லார்க்கும் பெய்யு மழை.
மூதுரை (10)

கோபம் ஆகாதுங்க…!பவள சங்கரி
images (2)அதிக கோபம் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நாம் அறியாததல்ல..  ஒருவர் அதிகமாக கோபப்படும்போது அவருக்குள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து உடலினுள் ஒருவகை இரசாயணம் உருவாகிறதாம். இதையும் ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சி செய்திருக்கிறாராம். அதீதமான அச்சத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தை எடுத்து  பரிசோதனைக்காக  சோதனைக் கூடத்தில் இருந்த பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோய்விட்டதாம். ஓர் உயிரைக் கொல்லும் அளவிற்கு  பலம் வாய்ந்த இரசாயணம் நமக்குள் எத்தகைய பிரச்சனைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? ஆம் அதீதமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் போன்றவைகள்  தோற்றுவிக்கும் இரசாயணம் மனிதனின் உடலையும் உயிரையும் பெரிதும் பாதிக்கவல்லது! என ஆராய்ச்சியாளர்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர். சுருக்கமா சொல்லணும்னா நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நம் உடலை நல்ல சிலையாகவோ அல்லது பின்னமான உருவமாகவோ அமைப்பது நம் கையில்தான் உள்ளது!

http://www.vallamai.com/?p=67458