Posts

Showing posts from April 3, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - 6

Image
”மனிதர்கள் தங்களுடைய மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்” - வில்லியம் ஜேம்ஸ்.
அதாவது புற உலகம் என்பது நம்முடைய உள்மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது.
இதை உணர்ந்து கொள்ளும் போது சக மனிதர்களுடன் நம் பழக்கம் அன்புடையதாகவே இருக்கிறது.

சரி விசயத்திற்கு வருவோம். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் குறிப்பிட்ட நேரமே செலவிட முடிந்தது. காரணம் அடுத்து நாங்கள் செல்ல வேண்டிய உத்தர கோசமங்கை கோவிலில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. திருநெல்வேலியிலிருந்து 100 பெண்களும், ஆண்களும் வந்து திருவாசகம் முற்றிலும் ஓதுகிறார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு. அதனால் விரைவாக வர வேண்டியதாகி விட்டது.


ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காலை 7 மணியளவில் கிளம்பி உத்தர கோச மங்கை 8.40 ம்ணியளவில் வந்து சேர்ந்துவிட்டோம்.


திரு உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவில், சேது வள நாட்டின் தலைநகரான இராமநாதபுரம் நகருக்கு தென்மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மங்களநாயகி அம்மன் ச…

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 3

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!
மாறனுக்கு போனை எடுக்கும் போதே ஏதோ பதட்டமாகத்தான் இருந்தது. அவள் நல்ல பதிலாகச் சொல்ல வேண்டுமே கடவுளே என்று உள்ளூர வேண்டிக் கொண்டேதான் போனை ஆன் செய்தான்.
ஹலோ, நீங்கள் சற்று முன் பேசியவர்.......
’ஹலோ, யெஸ், நான் மாறன், ஃபிரம் சென்னை’,
’ஓகே, ஓகே, சாரிங்க....அப்பா இந்த பிரபோசல் சரியா வரலே என்று சொன்னார்கள். ஏதோ ஜாதகத்தில் பிரச்சனை , பொருத்தம் சரியாக இல்லை என்றார்கள். மன்னிக்கவும்’ என்றாள்.
‘ ஹலோ, இல்லைங்க, என் அப்பா அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. ஜாதகமும் சரியாக இருக்கிறது, சொந்தமும் வருகிறது, என்றுதானே சொன்னார்கள்’, என்றான் அவசரமாக, எங்கே அவள் அழைப்பைத் துண்டித்து விடுவாளோ என்ற பயத்தில்.......’
’ம்ம் ..இல்லை அப்படி இருந்தால் , அப்பா சொல்லியிருப்பாரே.....சாரி’, என்று தயக்கமாகச் சொல்லிக் கொண்டே துண்டித்து விட்டாள் இணைப்பை.
மாறனுக்கு இது சற்றும் எதிர்பாராத திருப்பம்.அவனால் நம்பவே முடியவில்லை. தவறு எங்கு நடந்திருக்கும் என்று கூட யூகிக்கும் மனநிலை இல்லை அவனுக்கு. எதற்கும் அப்பாவிற்கு போன் செய்யலாம் என்று முயற்சி செய்தான். அவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எ…

மது ஏன் அப்படி செய்தாள் ?

மது ஏன் அப்படி செய்தாள் ?
வீடு கலகலத்துக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை சமயம் என்பதால், குடும்பத்தின் முக்கிய நபர்கள், அத்தனை பேரும் வந்தாகி விட்டது.வெகு தூரத்தில் இருக்கிற மும்பை அத்தை,மற்றும் மலேசியா மாமா, என்று எல்லோரும் வந்தாகி விட்டது. திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள்தானே இருக்கிறது. மது எல்லோருக்கும் செல்லப் பெண். அதனால் தான் உயர் அரசுப்பணியில் இருக்கும் தில்லி மாமா கூட தவறாமல் வந்திருக்கிறார். எல்லோரிடமும் உண்மையான பாசத்துடன் பழகும் அவள் குணம் அனைவரையும் சட்டென கவர்ந்து விடும். தொலைவில் இருக்கும் உறவினர்களைக் கூட குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் இனிய வழக்கமும் கொண்டதும் அவ்ள் மேல் அனைவரும் பாசமாக இருப்பதற்கான காரணங்கள். இந்த வயதில் முதியோர் இல்லம், மனநலம் குன்றிய குழந்தைகள் எய்ட்ஸ் நோயாளிகள் என்று ஏதாவது ஒரு முகாமில் தான் அவளுடைய விடுமுறைகள் கழியும். தயங்காமல் எவரிடமும் உதவி கேட்டு தேவைப்பட்டவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதிலும் திறமை அதிகம் அவளுக்கு.
நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த புண்ணியம் பல நல்ல குணங்கள் அவளிடம் …