Friday, April 25, 2014

உடற் கூற்று வண்ணம் : பட்டினத்தார்






http://youtu.be/JrL1mocPquQ

உடற் கூற்று வண்ணம்:

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற

Thursday, April 24, 2014

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் - (1)



பவள சங்கரி

கலீல் ஜிப்ரானின் பொன் மொழிகள் என் மொழி பெயர்ப்பில் - (1)



கவிதை என்பது மனோவசியத்திற்கான ஞானம்
ஞானம் என்பதோ மனதினூடே இசைக்கும் கவிதை.
நம்மால் ஒருவரின் மனதை வசியப்படுத்த முடியுமானால், 
அதே நேரம் அவர் மனதில் நம்மால் இனிய கீதமிசைக்கவும் முடியும்.
பின்னர் உண்மையில் இறை நிழலில் வாழக்கூடும் அவனால்.
அகத்தூண்டுதல் எப்போதும் இசைக்கும். புத்துணர்வு ஒருபோதும் விளக்கமளிக்காது.

கலீல் ஜிப்ரான்

Tuesday, April 22, 2014

புவியீர்ப்பு!



பவள சங்கரி




எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்குமாம்
சொல்கிறார்கள் அவர்கள்.
எரிகின்ற கொள்ளிகள் கூட அருகிலுள்ள  அனைத்தையும்
பாரபட்சமில்லாமல் ஈர்க்கும்.
பரியும் நரியும் பரிகாசமாய் கைகொட்டி எக்களித்தாலும்
மாடு என்றும் மாடாய் உயர்ந்து நிற்கும்.