Friday, April 25, 2014

உடற் கூற்று வண்ணம் : பட்டினத்தார்






http://youtu.be/JrL1mocPquQ

உடற் கூற்று வண்ணம்:

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருத்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்ற


உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து

மகளிர்கள் சேனை தராணை ஆடை
மண்பட உந்தி உடைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவு ஈர் அறிவாகி வளர்ந்து

ஒளிந்கை ஊறல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழழை மொழிந்து
வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரொடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே


http://youtu.be/wBTJt8QpLKg


http://youtu.be/GQDOJ3S6OKA


கல்லாப் பிழையும்

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும்,  நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

-  திருவேகம்ப மாலை,  பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)


சிவன் கழுத்தில் பாம்பு இருப்ப‍து ஏன்?


பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும், சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாது. மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும்போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்.



பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே!

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் *குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! *(குலாமர்=கீழ்மக்கள்)

அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால்
சொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப்
பன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே!

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வரும் மாயைதன்னை *மறலி விட்ட (*மறலி=காலன்)
தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!


வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே!

ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!

பொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும்,
தெருள்உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல் 
அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,
இருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே!

நாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்னஈயா 
மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!





http://youtu.be/m8jQjfdOHEU

http://youtu.be/wBTJt8QpLKg

http://www.youtube.com/watch?v=-wMfEiigkao&feature=share&list=PL0NTVBK7D46arvBBzTgbA5yvQhab-iVDO&index=1

1 comment:

  1. பாம்பை கழுத்தில் அணிந்திருக்கும் விளக்கம் அருமை... உண்மையும் கூட.... குண்டலினியை (குருவின் துணையோடு) செய்தால் உணரலாம்...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...