Monday, February 18, 2013

வாலிகையும் நுரையும் - கலீல் ஜிப்ரான் (12)



 

பவள சங்கரி


இப்புவியின் சுகங்களனைத்தையும் முழுமையாகத் தங்கு தடையின்றி அனுபவிக்கும் வகையில் துண்டாடிய புவனமதைத்   துறந்தவர் எவரோ அவரே துறவி.

சான்றோருக்கும், கவிவாணருக்கும் இடையே அங்கோர் பச்சைப்பசும்புல்வெளி இருக்கிறது; அந்தச் சான்றோரதைக் கடக்க நேர்ந்தால் விவேகியாகிறாரவர்; கவிவாணரதைக் கடக்க நேர்ந்தாலோ தீர்க்கதரிசியாகிவிடுகிறார்.

இருப்பினும் சந்தையில் தங்கள் தலைகளைக் கூடையில் சுமந்து கொண்டு, ”ஞானம்! விற்பனைக்கு ஞானம்!எனக்கூவித் திரியுமந்த தத்துவ ஞானிகளைக் கண்டேன் யான்.
பாவமந்த தத்துவ ஞானிகள்’. தம் இதயத்திற்கு உணவளிக்கும் பொருட்டு தம் சிரசையே விற்க வேண்டியதாகிறது.