Saturday, May 2, 2015

புல்மேல் விழுந்த பனித் துளியே



அன்பு நண்பர்களே,
என் பாடல் உயிர் பெற்றிருப்பதைக் கேளுங்கள்… அன்பு நண்பர் திரு ஆர். எஸ். மணி (கனடா) அவர்கள் இசையும், குரலும் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்.. (GAZAL)

https://soundcloud.com/vallamai/song-poomel



புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்
கல்லை உருக்கிய கவிமழையே
கனவில் நிறைந்த கற்கண்டே
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்
வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்
கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்
உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
குழலோசையாய் அது இசைத்திடுமோ
பனியும் காற்றும் உரசுகையில்
மெல்லிய கீதம் இசைத்திடுமோ
மலையும் நதியும் உரசுகையில்
எந்த மொழியில் குலவிடுமோ
நினைவெல்லாம் பார்வையானால்
மொழியெலாம் ஊமை ஆகிடுமோ
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
என்னை உருக்கிய கவிமழையே
எங்கே போனாய் இத்தனை காலமாய்
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்
புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்
—————————————————————-

Sunday, April 26, 2015

நன்றி நன்றி நன்றி!


பவள சங்கரி


அன்பினிய தோழி கலைமகள் ஹிதாயா,


வணக்கம். எமக்கு பரணி பாடவும், தக்கயாகப் பரணி பாடவும் பிள்ளைத்தமிழ் பாடவும் ஆசை. நம் இளந்தளிர்கள் மட்டப் பலகையும் இதயத்துடிப்புமானியும் கையாளவும் ஆசை.எம் தோழியரும், தோழர்களும் யாழும் வீணையும் வாசிக்க ஆசை. எம்மண்ணில் இருந்தாலும் நம் இனம் ஒன்றே. யாழும், வீணையும், மட்டப் பலகையும் இதயத்துடிப்புமானியும் நம் குலத்தளிர்களின் கையில் ஏந்த வேண்டுமென்றால் அற்றை நிலையை மறந்து இன்று வாழ்ந்திட எங்கு காணினும் சக்தியடா என்று பாரதி கூறியது போல எங்கும் நம் சக்தியைக் காண விழைய வேண்டும். உலகம் போற்றிய ஒரு மாபெரும் நூலகம் எரிந்தாலும் இனி பல்லாயிரம் நூலகங்களை நாம் ஏற்படுத்துவோம். மேலை நாடுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் நூலகங்களே பிரதானமாக இடம் பெற்றிருப்பது போல நம் இல்லங்கள் தோறும் நூலகங்கள் ஏற்படுத்தி நம் குலத் தோன்றல்கள் மேன்மைபெற்று உலகமே தம் காலடியில் என்று தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும் நாளே, ‘கலாசூரி’ விருது பெற்ற உண்மையான நாளாகக் கருதுவேன். என்று எம் தோழியர் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வருகிறதோ, அற்றை நாளே உலகில் உள்ள அனைவருக்கும் ஆனந்தமான நாள். தாய் மண்ணை விடுத்து வாழ்வாதாரம் வேண்டி அந்நிய மண்ணை நாடும் நிலை ஒழித்து அந்நியர் அனைவரும் நம் மண்ணை விரும்பி வரும் நாளே ‘கலாசூரி’ விருது உயிர் பெறும் நாள். தமிழினமும், எம் குலப் பெண்களும் வளமான வாழ்க்கையைப் பெறும் அந்த நாளே இந்த ‘கலாசூரி’ அதாவது கலைகளின் கதிரவனாகப் பிரகாசிக்கும் நாள்! சர்வதேச அமைப்பை ஏற்படுத்தி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தங்கள் அமைப்பினரின் மகிழ்ச்சிகரமான செயலுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி . எம்மைப் போன்றோரை உற்சாகப் படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், இதுவரை நான் எழுதிய மற்றும் இனி எழுதப் போகும் மற்ற நூல்களையும் அனைவருக்கும் காணிக்கையாக்குவதே எமது நன்றி தெரிவிக்கும் விதமாக எண்ணுகிறேன். நன்றி நண்பர்களே.



கலைமகள் ஹிதாயா

அன்பினிய தோழி பவள சங்கரி 
மதிய வந்தனம் 
விண்ணில் இருந்து பொழியும் மழைத் துளிகளை விட, 
மண்ணில் இருந்து எழுதும் ஒரு எழுத்தாளனின் (சிந்தனைத்துளி) 
இணையற்ற மைத்துளியாகும். அது மகிமை மிக்கதுமாகும் 
ஒர இந்திய பெண்ணை ,ஓர் இலங்கை பெண் இனம் கண்டு கௌரவிப்பது கூட ஓர் வரமாகும் 
பொருத்தமான ஒருவரை தெரிவு செய்தது மிகவும் சந்தோசம் 
தாங்கள் நினைத்தவை யாவும் நிறைவேறி மண்ணைத் தொடாத விண்ணாய் 

விண்ணைத் தொடாத மண்ணாய் உங்கள் ஆற்றலை யாரும் தொட்டுச் செல்ல முடியாத உயர்வுக்கு செல்ல வேண்டும் என்று மன நிறைவோடு நிறைகுடமாய் வாழ்த்துகின்றேன்



கலாசூரி விருதிற்கு நன்றி!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு


கலாசூரி விருது




பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவள சங்கரி த. திருநாவுக்கரசு
அவர்கள்பெறுகின்றார்

பொன் மொழிகள்!

பவள சங்கரி







கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...