கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்ட பவள சங்கரி த. திருநாவுக்கரசு
அவர்கள்பெறுகின்றார்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது )
கொடுத்து கௌரவிக்க தீர்மானித்து உள்ளார்கள்
அதன் முதல் கட்டமாகாக கலாசூரி விருதினை இவர் பெறுகின்றார்
உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி
உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்
உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு
அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது
அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்
பெண்கள்
உலகின் கண்கள் .
உலக முகத்திற்குக்
கோடி கோடியாக் கண்கள்!
இன்றேல் -
உலகம் விழித்திருக்க
முடியாது !
ஒளி பிறந்திருக்கவும் முடியாது !
பெண்கள் என்னும்
இந்தக் கண்கள் இன்றேல்
பூமி கூட
ஒரு -
அக்கினிப் பிழம்பாயிருக்கும் !
ஆமாம் கடல் கடந்து வாழும் சகோதரி பவள சங்கரி த. திருநாவுக்கரசு
இவர் இளங்கலை (குடும்பவியல்) , இந்தி - பிரவீண், (Hindi Prachar Sabha) மத்திய அரசின் இந்தி டிப்ளமா படிப்பு,
(Dip.in central Hindi Directorate) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின்
Creative Writing in English (Dip.course) கல்வித் தகுதி பெற்றவர்
இழை மறை காயாக மறைந்து இருந்த பல கலை உள்ளங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை சகோதரி பவள சங்கரி த. திருநாவுக்கரசுஅவர்களுக்கு உண்டு :
இவருடைய எண்ணமும் எழுத்தும் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் சார்ந்தது
தனது எழுத்துக்கள் வாயிலாக இளையோரை வழிநடத்தல் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான சிந்தைகளை ஊக்குவித்தல். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்கள் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்தல்
நாட்டுப்பற்றும், தமிழ் பற்றும் தன் உயிர் மூச்சு. எனக் கருதுபவர்.
சகோதரி பவள சங்கரியின் சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள்,, தொடர் கட்டுரைகள் பல பிரபலமான பத்திரிக்கைகளிலும், நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
இவரது வெளிவந்துள்ள நூல்களின் விவரம்;
1. விடியலின் வேர்கள் - பேராண்மைமிக்க பெண்களின் வரலாறு
2. கனலில் பூத்த கவிதைகள் - சிறுகதைத் தொகுப்பு
3. கனவு தேசம் - சிறுகதைத் தொகுப்பு
4. நம்பிக்கை ஒளி, வெண்ணிலவில் ஒரு கருமுகில் - குறுநாவல்கள
5.யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு
6.வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா - தன்னம்பிக்கை கட்டுரைத் தொகுப்பு
7.கதை, கதையாம் காரணமாம் - குழந்தைகளுக்கான கதைகள்
8.இப்படிக்கு நான் - வாழ்க்கை வரலாறு
9. நயமிகு நங்கையர்
10. அன்பெனும் சிறைக்குள்
பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படைப்புகளைப் பெண்கள் எழுதுவதற்கும் ஆண்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
. பெண்கள் அப்பிரச்சனைகளின் வலிகளை உணர்கிறார்கள்;அவ்வுணர்வுகளை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள்.
ஆணாதிக்கச் சூழலில்இவர் எழுத்து சிறப்பு மிக்கது
இந்திய பெண் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணும்போது இவரும் ஒருவர்
.அன்பான மனசும், அறிவுக் கூர்மையும் கொண்ட ஆளுமைமிக்க எழுத்தாளராய், தன் ஆற்றலை அகலப்படுத்திக் கொண்ட இவரது எழுத்துக்கள் காத்திரமான கருத்தாலமிக்கது.
சமுதாயத்தின் சரிவுகளும் சஞ்சனங்களும் இவரது எழுத்துக்களில் நிறைந்து காணப்படும்.
அவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்
,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல்
முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
இவரது விவசாயி எனும் கட்டுரை சிறப்புப் பெருகின்றது
மனித இனத்துக்கே அன்னமிடும் விவசாயிகள் இப்படி வெந்து வேதனையில் சாகலாமா? நாடு தாங்குமா? விஞ்ஞானமும், அறிவியலும் வளர்ந்துகொண்டிருக்கிறது என்று மார் தட்டிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம்மோடு, நம் வயிறு நிரம்ப உழைக்கும் ஒரு இனம் இப்படி அழிந்து வருவது உணவு விசயத்தில் தன்னிறைவு பெற்றுள்ள நம் நாட்டிற்கு நல்லதா? இந்த நிறைவு நிலைக்குமா? இப்படி பல கேள்விகள் இன்று மக்களிடம் எழ ஆரம்பித்துவிட்டன. விவசாயிகளின் தற்கொலை விவகாரம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நேற்றும் நம் தலைநகர் தில்லியில் தொழிலதிபர்களுக்கு ஆதரவான நில உரிமைப்படுத்தும் சட்டம் எதிர்ப்பு தெரிவித்து ‘ஆம் ஆத்மி கட்சி’ நடத்திய எதிர்ப்புப் பேரணி மற்றும் தில்லி முதல்வர் கேஜரிவால் கலந்துகொண்ட எதிர்ப்புக் கூட்டத்தில் அருகிலேயே மரத்தின் உச்சியில் ஏறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். தொண்டர்கள் தடுப்பதற்கு முயன்றும் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதேயொழிய குறைந்தபாடில்லை. 1995 ம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் அளிக்கிறது கருத்துக் கணிப்பு. இதில், சட்டீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தற்கொலை செய்திகள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன. நம் இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மகாராஷ்டிரம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை. போதாதற்கு அனைத்து விவசாயிகளுக்குமே பிரச்சனை தரக்கூடிய நிலங்களை உரிமைப்படுத்தும் சட்டம் வேறு அச்சமேற்படுத்திக்கொண்டிருக்கிறது.
இன்று சக்கரைத் தொழிற்சாலைகள் நலிவுடன் இருக்கின்றனவா அல்லது கரும்பை விளைவிக்கக்கூடிய விவசாயிகள் வளமற்று வாழ்கிறார்களா? சக்கரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று கிலோவிற்கு ரூ. 8 முதல் 10 வரை விலை இறங்கியுள்ளது. ஆனால் இந்த விலை இறக்கம் முழுமையாக பொதுமக்களைச் சென்று அடைந்துள்ளதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. கிலோவிற்கு ரூ. 2 அல்லது 3 தான் பொதுமக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. பொதுவாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை இறக்கம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. அதாவது நம் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கிறது என்றல்லவா அர்த்தம். இதைவிடுத்து விலையேற்றம் ஏற்படுத்தும் வகையில் ஆயத்தீர்வுகளையும், இறக்குமதி வரிகளையும் அதிகப்படுத்த அரசு முயல்வது சரியான தீர்வா? சக்கரை ஆலை அதிபர்களுக்கு மட்டுமே பயன் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. இன்று கரும்பு விளை நிலங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. முன்பு பெரியார் மாவட்டத்தில் 5 இலட்சம் ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட கரும்பு தற்போது மூன்றரை இலட்சமாகக் குறைந்துள்ளது. இன்னும் அதனுடைய அளவு சுருங்கக்கூடிய வாய்ப்பே உள்ளது. இதற்கு இந்த விலை வீழ்ச்சி காரணமல்ல. நாம் எந்த ஒரு பொருளை வாங்குவதென்றாலும் பணம் கொடுத்துத்தானே வாங்குகிறோம். ஆனால் விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கும் போது அதற்குரியத் தொகையைக் கொடுக்காமல் காலந்தாழ்த்துவது ஏன்? தோராயமாக, 22,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதான் விளை நிலங்களின் குறைவிற்குக் காரணம். பணப் பயிர் என்று கூறக்கூடிய கரும்பிற்கே இந்த நிலை. சக்கரை ஆலை அதிபர்கள் பணம் கைக்கு கிடைத்த பின்புதான் சக்கரையை வெளியே அனுப்புகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் பணம் தராமல் இழுத்தடிப்பது சரியாகாது. சக்கரை ஆலை அதிபர்களுக்கு மொலாசஸ் மூலமாக ஒரு வருமானம் கிடைக்கும்போது அதற்குரிய ஆயத்தீர்வை அரசு ஏன் குறைக்க வேண்டும். கரும்புச் சக்கை கூட காகிதத் தொழிற்சாலையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி பல வகையிலும் வருமானம் பெறக்கூடிய சக்கரை ஆலைகளை ஒரு சிலர் நலிவடையச் செய்ய அரசு அனுமதிக்கலாமா. அண்டை மாநிலங்களிலிருந்து வரக்கூடிய உபரி சக்கரையும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய சக்கரைக்கும் அதிகப்படியான வரி விதிப்பதால் செயற்கையான விலையேற்றம் ஏற்பட வழியாகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்தால் நம் ரூபாயின் மதிப்பு கூடி நாட்டின் பொருளாதார உயர்வும் சாத்தியமாகும்.
’கலாசூரி விருது’ பெற்றதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். குறிப்பாக ’வல்லமை’ மின்னிதழ் ஆசிரியரான தங்களுக்கு அளிக்கப்பட்டதால் அந்த விருதுக்கே ஓர் பெருமை ஏற்பட்டுள்ளது எனத்தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete