Sunday, April 10, 2022

உயிர் பெற்ற என் சிறுகதை

 

2011ஆம் ஆண்டில், 'எங்கே அவள்' என்று ஒரு காதல் கதை எழுதியிருந்தேன். அது இளமையை உருக்குலைக்கும் werner syndrome என்ற ஒரு கொடுமையான வியாதி .. 21 வயதில் பாட்டியின் தோற்றத்தையும் கொடுத்து 40 வயதில் ஆயுளையும் முடித்தே விடும் அந்த வியாதியினால் பாதிக்கப்பட்ட கதாநாயகியின் நெகிழ்வான நிலை குறித்த சிறுகதை ..



சரி அதை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள் ... இன்று விகடனில் பாரி ரோம்பெர்க் சிண்ட்ரோம் (Parry Romberg syndrome) என்ற அரிதான வகை நோய் பற்றியும், அரசு மருத்துவமனையில் செலவின்றி அந்தப் பெண்ணின் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதைப் படித்தவுடன் என்னுடைய இந்த கதை நினைவிற்கு வந்தது ..

"மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கட்டாயம் நல்லதொரு தீர்வும், அவளுடைய நிறைந்த ஆயுளுக்கு உத்திரவாதமும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் காத்திருக்கிறான் இந்த உண்மைக் காதலன்" என்று என் கதையை முடித்திருப்பேன். அது இன்று நினைவானதில் பெருமகிழ்ச்சி ...



என் கதையை வாசிக்க விரும்பினால் இதோ என் வலைப்பூவில் இங்கு .....



https://coralsri.blogspot.com/2011/11/blog-post_23.html



விகடன் செய்தி இதோ இங்கே ....

https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-government-hospital-doctors-solved-woman-s-rare-disease

 

 

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...