பவள சங்கரி
”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ... எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா”
அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா கொடுங்க. இன்னும் 2 மாதமாவது ரொம்ப ஜாக்கிரதையா ரெஸ்ட்டுல வச்சிருங்க. மேஜர் ஹார்ட் ஆபரேஷன் இது. “
சரிங்க ஐயா. ரொம்ப சந்தோசமுங்க. வாரேனுங்க.
“சரி, 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து காட்டிட்டுப் போங்க”