Tuesday, September 11, 2012

கதையே கவிதையாய்!


பவள சஙகரி
செவிடாக இருந்தவள்
ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.
ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த கைவளைகள போன்றவைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இங்கே பார் இது எத்துனை கந்தல் துணிகளாக இருக்கிறதென்று. ஆயினும் ஒரு செல்வந்தரின் மனைவியான நான், அந்த அழகியப் பொருட்களில் சிலவற்றையேனும் வாங்க வேண்டும்என்றாள்.
காலைக் காப்பியின் சுவையை இதமாக அனுபவித்துக் கொண்டிருந்தவன், என் அன்பே, நீ விரும்பும் அனைத்துப் பொருட்களையும், நீயே சென்று வாங்கிக் கொள்வதைத் தடை செய்வதற்கான எந்தக் காரணமும் இல்லைஎன்றான்.

அதற்கு அந்தச் செவிட்டு மனைவியோ, “முடியாது! எப்பொழுது பார்த்தாலும் நீ வேண்டாம், வேண்டாம்என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறாய். நம் சொந்தங்களையும், உம் செல்வத்தையும் அவமானப்படுத்தும் வகையில் யான் நம் நண்பர்களின் மத்தியில் கந்தலையே உடுத்திக்கொண்டு நிற்க வேண்டுமா?” என்றாள்.
அக்கணவனோ, “நான் அப்படிச் சொல்லவில்லை, ‘இல்லைநீ தாராளமாக சந்தைக்குச் சென்று நம் நகரத்திற்கு வந்திருக்கும், அனைத்து அழகிய உடைகள் மற்றும் அணிகலன்களையும் வாங்கிக்கொள்என்றான்.
ஆனால் திரும்பவும் அவனுடைய வார்த்தைகளைத் தவறாகவே புரிந்து கொண்டவள், “அனைத்து செல்வந்தர்களுக்குள் நீவிரே மிக மோசமான கருமி. என் வயதொத்த மறறைய மங்கையர் அனைவரும் விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொண்டு நகரத்தின் தோட்டங்களில் பெருமையாக வலம் வரும்போது எனக்கு மட்டும் அழகானதனைத்தையும் மறுதலித்துக்கொண்டிருக்கிறாயேஎன்று பதிலிறுத்தாள்.
அவள் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். மேலும் அவளுடைய கண்ணீர் தம் மார்பகத்தின் மீது விழ, மீண்டும் விசும்பலானாள். யான் உடையோ, அணிகலனோ எப்போது விரும்பிக் கேட்கினும் நீர் முடியாது, முடியாதுஎன்றே ஒவ்வொரு முறையும் கூறுகிறாய்.
பின்னர் அக்கணவன் இரக்கம் கொண்டு, “என் அன்பிற்குரியவ்ளே, சந்தைக்குச் சென்று நீ விரும்புவதெல்லாம் வாங்கிக்கொள்என்று அன்பான வார்த்தைகளுடன் எழுந்து நின்று தம் பணப்பையிலிருந்து கைநிறைய பொன்னை எடுத்து அவள் முன் நீட்டினான்.
அநநாள் முதற்கொண்டு அந்த செவிட்டு இளம் மனைவி, அவளுக்கு ஏதாவது வேண்டும் பொழுதெல்லாம் தம் கண்களில் கண்ணீர் முத்துக்களுடன் வந்து தன் கணவன் முன் நிற்க, அவனும் மௌனமாக கையளவுப் பொன்னை எடுத்து அவள் மடியில் வைத்தான்.
தற்போது, தற்செயலாக அந்த இளமங்கைக்கு நெடும் பயணங்களை வழமையாகக் கொண்ட ஒரு இளைஞன் மீது காதல் வயப்பட நேர்ந்தது. அவன் பயணம் செல்லும் காலங்களிலெல்லாம் அவள் தன்னுடைய பலகணியில் அமர்ந்துகொண்டு விசுமப ஆரம்பித்துவிடுவாள்.
இவ்வாறு அவள் விசும்புவதைக் காணும் அவளுடைய கணவனோ, தம் மனதிற்குள்ளேயே, “ கடைத்தெருவில் ஏதேனும் புதிய திருத்தலப் பிரயாண்க்குழுவினர் பட்டாடைகளும், அரிதான ஆபரணங்களும் கொண்டு வந்திருக்கக்கூடும்என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
மேலும் அவன் கைநிறைய பொன்னை எடுத்து அவள் முன் வைக்கலானான்.
She Who Was Deaf - Khalil Gibran
Once there lived a rich man who had a young wife, and she was stone deaf.
And upon a morning when they were breaking their feast, she spoke to him and she said, "Yesterday I visited the market place, and there were exibited silken raiment from Damascus, and coverchiefs from India, necklaces from Persia, and bracelets from Yamman. It seems that the caravans had but just brought these things to our city. And now behold me, in rags, yet the wife of a rich man. I would have some of those beautiful things."
The husband, still busy with his morning coffee said, "My dear, there is no reason why you should not go down to the Street and buy all that your heart may desire."
And the deaf wife said, "'No!' You always say, 'No, no.' Must I needs appear in tatters among our friends to shame your wealth and my people?"
And the husband said, "I did not say, 'No.' You may go forth freely to the market place and purchase the most beautiful apparel and jewels that have come to our city."
But again the wife mis-read his words, and she replied, "Of all rich men you are the most miserly. You would deny me everything of beauty and loveliness, while other women of my age walk the gardens of the city clothed in rich raiment."
And she began to weep. And as her tears fell upon her breast she cried out again, "You always say, 'Nay, nay' to me when I desire a garment or a jewel."
Then the husband was moved, and he stood up and took out of his purse a handful of gold and placed it before her, saying in a kindly voice, "Go down to the market place, my dear, and buy all that you will."
From that day onward the deaf young wife, whenever she desired anything, would appear before her husband with a pearly tear in her eye, and he in silence would take out a handful of gold and place it in her lap.
Now, it changed that the young woman fell in love with a youth whose habit it was to make long journeys. And whenever he was away she would sit in her casement and weep.
When her husband found her thus weeping, he would say in his heart, "There must be some new caraven, and some silken garments and rare jewels in the Street."
And he would take a handful of gold and place it before her.
- --oOo-- -

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...