Posts

Showing posts from July 18, 2010

என்.... குழந்தையா........இப்படி......?

சமீபத்தில் என் தோழி ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், காரணம் கேட்டபோது எனக்கும் அதிர்சியாக இருந்தது. குழந்தைகள் வளர்ப்பில் இன்று அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, சில நேரங்களில் மற்ற பழக்கவழக்கங்களை கவனிக்காமல் விட்டுவிடும் போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.
என் தோழிக்கும் அப்படித்தான் ஆனது. இந்தத் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் . ஏழு வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அதனால் இயல்பாகவே அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.ராஜா வீட்டு கன்றுக் குட்டி போல வளர்ந்து வந்தான். ஒரு பெரிய கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே நல்ல புத்திசாலியான அவன் படிப்பில் திடீரென தொய்வு ஏற்பட்டது. அவன் நடவடிக்கைகளிலும் சிறிது, சிறிதாக மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடந்தான், பெற்றோருக்கு சந்தேகம் வர, அவனை கவனித்துப் பார்த்ததில், அவனுக்குப் போதைப் பழக்கம் இருப்பது தெரியவர, பேரதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர். நாளுக்கு நாள்…

என்னங்க மனசு சரியில்லையா?

ப்........ச்சு........ என்ன வாழ்க்கைங்க..... போர் அடிக்குது. என்னமோ போங்க........
இப்படி பலவிதமாக, பலவிதமான சலிப்புகளை பலரிடம் கேட்க முடிகிறது.வாழ்க்கை என்றால் ஏதோ ஒரு பிரச்சனை, ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து, கவலைப் பட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், அது, டிப்ரஷன் என்கிற மனச் சோர்வில் தான் கொண்டு விடும்.
சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் பத்துக்கு எட்டு பேர், அதுவும் ஆண்களைவிட,பெண்களே அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளே அதிகமாக இந்த மனச் சோர்வின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்களாம்.
இதற்கான அறிகுறிகள் என்னென்னத் தெரியுமா?
1.நிரந்தரக் கவலை
2.எந்த வேலையிலும் மனம் ஈடுபடாமை
3.சிடுசிடுப்பு
4. பசியின்மை
5.தூக்கமின்மை
6.களைப்பு போன்றவைகள்.
இதன் பின் விளைவுகள், அசிடிட்டி, தலைவலி, உடற் சோர்வு, கை, கால் வலி ஆகியவைகள்.
கணவர், குடும்பத்திலுள்ளவர்கள் பற்றிய கவலைகள், பணப்பற்றாக்குறை, குழந்தைகள் எதிர்காலம், தன்னால் எதுவும் சரி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம், இது போன்ற காரணங்களினால் மனக்கவலை ஏற்பட்டு, அமைதியை இழக்க நேரிடுகிறது.
எந்த காரணத்திற்…

ஊருக்கு உழைத்திடல் யோகம் !!!!!

Image
கதர் ஆடையை அள்ளிச் செறுகிய எளிமையான தோற்றமும், படிய வாரிய தலைமுடியும், அனைவரிடமும், மிக இயல்பாக பழகும் தன்மையும் பார்க்கும் பொழுது, திருமதி அருணா ராய், அவர்கள் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே காட்சியளிக்கும் இவரின் தொடர்ந்த சமூகப் பணிகளுக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் 'மகசேசே விருது' 2001ம் ஆண்டு அளிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் பிறந்து, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர் தன் இளம் வயதிலேயே வழக்கறிஞரான தந்தையுடன் தில்லியில் சென்று தங்கி விட்டார். இராணுவத் தளபதி கே.சுந்தர்ஜீ அவர்கள் அருணாராயின் தாய்மாமன். 1967ம் ஆண்டு தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்று, பின்னர் ஐஏஎஸ் படித்து தேர்ச்சி பெற்று 1969ல் தென்னாற்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், 1970ல் பாண்டிச்சேரியிலும் பணியாற்றியுள்ளார் ஆயினும் பரவலாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சேவை செய்யும் வண்ணம் தன் பதவியையே 1975ம் ஆண்டு துறந்து, ராஜஸ்தான் சென்று சமூகப் பணி மற்றும் ஆய்வு மையம் [Social work and research centre SWRC] தன் கணவர் திரு சஞ்ஜித் பன்கர் ராய் என்பவரால் …

தப்புக் கணக்கு

ஏன்னா, யாரோ பெல் அடிக்கறாளே, வாசக்கதவை திறக்கப்படாதோ? நான் பேப்பர் படிச்சுண்டிருக்கேனோல்லியோ. நீயே போய் தொறயேன். நான் கைக்காரியமா இருக்கேன்னா. நீங்களே செத்த தொறங்கோளேன். ஒரு அரை பக்கமானும் சேந்தா மாதிரி படிக்க விட மாட்டியே, முணுமுணுத்துக் கொண்டே போய் கதவைத் திறந்தார் வெங்கடேசன்.
அட வாம்மா, பத்மா. தனியாவா வந்தே? உன் ஆத்துக்காரர் வரலியா? இல்லப்பா, அவர் வேலையா வெளிய போயிருக்கார். நான் ஒரு முக்கியமான விசயமா வந்தேன்.
வாடி, பத்து, இன்னைக்கு காலையிலிருந்து உன்னைத்தான் நினைச்சுண்டிருந்தேன். பருப்பு உசிலி பண்ணினேன், உனக்குப் பிடிக்குமோல்லியோ, அதான்!
என்னம்மா, என்னமோ முக்கியமான விசயமா வந்தேன்னியே, என்று அவளையோசனையுடன் பார்த்தார், வெங்கடேசன். ஆமாம்ப்பா, இன்னைக்கு நம்ம வைசாலியை பொண்ணு பாக்க மாப்பிள்ளை ஆத்துக்காரா, பெங்களுருலருந்து வரா. அதான் உங்க இரண்டு பேரையும் கூட்டிண்டு போலாமேன்னு வந்தேன்., என்றாள்.
அம்மா ஏற இறங்க தன்னைப் பார்த்து ஏதோ முனுமுனுப்பதைப் பார்த்து, என்னம்மா, உன் பேத்தியை பார்க்க மாப்பிள்ளை ஆத்துக்காரா வரான்னு சொல்றேன், உன் முகத்துலே சந்தோசத்தயே காணோமே, ஏம்மா என்றாள், சலிப்பாக.
ஆமாண்டி, மாப்ப…

முகத்திரை.

பாரதி எனும் என் பெயரின் முகமூடியில்
உன் வீர தீர சாகசங்களையெல்லாம்
வரைந்துத் தீர்த்த நீ
இன்று மட்டும் உண்மையை எழுதிவிட்டாயே
நானும் ஒரு கோழைதான் என்று!!!

துணை

நான் பிரச்சனையிலிருக்கும் போது தீர்வு சொல்லி
குழப்பத்திலிருக்கும்போது தெளிவடையச்செய்து
அழும்போது ஆறுதல் அளித்து
சோர்ந்தபோது தன்னம்பிக்கை அளித்து
தவறியபோது தத்துவ ஞானம் அளித்து
என் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக
இருந்த என் துணையை இழந்தேனே!
இழந்தது அழியக் கூடிய மனிதத் துணையை அல்ல!
உயிரினும் மேலான, என்றுமே
அழிவென்பதேயில்லாத அத்துணை
நண்பர்கள் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க
மறந்த என் புத்தகங்கள்தான்!!!!

முதுமையின் மழலை

Image
என் மழலைக் குறும்புகளை உன் தாய்மை பறைசாற்றி மகிழ்ந்தது

உன் முதுமைக் குறும்புகளை என் ஆணவம் மூடி மறைக்கிறது.

என் மழலை அழிச்சாட்டியத்திற்கு நீ கொடுத்த பரிசு வண்ண வண்ண இனிப்புகள், தாலாட்டுக்கள்.

உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.

என் மழலையின் பரிணாமம் வாலிபம் உன் முதுமையின் பரிணாமம் மறுபிறவியா?

அடுத்த பிறவியிலும் உன் கர்பக்கிரகத்தில் என் உயிர்க்கருவை அனுமதிப்பாயா?

வெற்றி

முட்டுக் கட்டைகளை மூலதனமாக்கி
ஏமாற்றங்களை ஏணியாக்கி
சோதனைகளை சாதனையாக்கிய
வெற்றி விழாவில் பாராட்டுப் பத்திரம்
அந்த முட்டுக்கட்டைக்கு.
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு ஆண்.

. உயரமாக நில்லுங்கள்

1. உடல் அளவில்.... உயர்ந்து நில்லுங்கள்
2. மன அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்
3. ஆன்மீக அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்.

சிறந்தவைகள்

நதிகளில் சிறந்தது கங்கை , மலைகளில் சிறந்தது இமயம் , மலர்களில் சிறந்தது தாமரை , மணிகளில் சிறந்தது மாணிக்கம் , தெய்வங்களில் சிறந்தவர் முருகர் , யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம், குறை, கடமை, தன்னுள் கண்டு,
தான் கண்டு, தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
என் குற்றம், பிறர் மீது சுமத்தக் கூடும்.
ஏதெனும் கண்டாலும், மன்னித்தாலும்,
மேன்மைக்கே மனம் உயரும். பிறந்தவரால்
மிக வருத்தம், துன்பம். அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு.
நாம் கண்ட தெளிவு. இது வாழ்த்தி வாழ்வோம்.