Posts

Showing posts from November 20, 2011

எங்கே அவள்.......?

Image
பவள சங்கரிநான் உன்னைக் காதலிப்பேன்.
மரணமற்ற நித்ய காதலாகும் அது.
கதிரவன் குளிர்ந்துபோகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் நித்தம் உன்னைக் காதலிப்பேன்
–ஷேக்ஸ்பியர்

அற்றைத் திங்களில்,நிலவொளியில் நீயிருந்தாய் என்னோடு இற்றைத் திங்களில் நிலவு மட்டுமே என்னோடு எங்கே சென்றாய் என் இனிய இதயமே என்று தொலைந்த தன் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த மூன்று ஆண்டு காலமும் தோல்வி மட்டுமே மிஞ்சிய சூழலில் தேடலையும் நிறுத்தாமல், என்றோ ஓர் நாள் தன் அழகு தேவதையைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் ஆதித்யா நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான். இந்த மூன்று வருடங்களில் அவள் வீட்டை நூறு முறையாவது வட்டமிட்டு வந்திருப்பான். பூட்டு மட்டுமே கண்ணில் பட தவித்துப் போய் திரும்புவான். இறுதியாக அவளைச் சந்தித்தது தங்கள் கல்லூரியின் இறுதி நாள் பிரிவு உபசார விழாவில். கல்லூரி முழுவதும் இவர்களின் நெருக்கம் தெரிந்த விசயம் என்றாலும், அன்று இருவரும் சேர்ந்து மேடையில் ஒரு நடன நிகழ்ச்சி கொடுத்து அனவருக்கும் அதனை பறைசாற்றியது இன்றும் பசுமையாக இருந்தது அவன் மனதில். மும்பையில் தன் சகோதரியுடன் சில நாட்கள் தங்கி வருவதாகச் சொல்லிச் சென்றவ…

வாழ்க்கைத் தத்துவ முத்து!

Image
நறுக்.. துணுக்… பவள சங்கரி நேற்று , ஈரோடையில் ஒரு பாலத்துக்கருகில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் காதில் விழுந்த வாழ்க்கைத் தத்துவ முத்துகள்! சில்க் சிப்பாக்காரர் : சே, பணக்கார வீட்டில் கடைசிப் பையனாவும், ஏழை வீட்டில் மூத்த பையனாவும் பொறக்கவே கூடாது சாமி….. கதர் சிப்பாக்காரர் : ஏனுங்க இப்படி அலுத்துக்கறீங்க…..? சி.சி. : பின்ன என்னங்க…. பணக்கார வீட்டில கடைசி பையனா பொறந்தா, அண்ணங்காரன் எல்லாத்தையும் அனுபவிச்சிப்பிட்டு, மிச்சம் மீதியை குடுத்துப்போட்டு,இதில அதிகாரம் வேற…. அங்கன எளவுக்குப் போடா…. இங்கன கன்னாலத்துக்குப் போடா….. நோம்பி நாளும் அதுவுமா, வசூலுக்குப் போடான்னு கடுப்பேத்றானுவ…..ஏழை ஊட்டுல மூத்தவனா பொறந்தா கேட்கவே வாணாம்….. அத்தனை பாரமும் அவந்தலைமேலத்தானே…….. க.சி: அட… ஆமால்ல…. சரி ….சரி அடுத்த செம்மத்துல ஒத்தப்புள்ளையா பொறக்கோனுமின்னு நேந்துக்கோங்க………. படத்திற்கு நன்றி - http://www.shutterstock.com/pic.mhtml?id=63255343

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(27)

Image
பவள சங்கரிஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தையே மாற்றக்கூடிய வல்லமை காலத்திற்கு உண்டு. அவரவரின் சூழ்நிலைகளே பல நேரங்களில் அவர்களை ஆளுகின்றது என்பதுமே நிதர்சனமாகிறது. அதனை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும், அதன் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் போது அந்த வெப்ப வீச்சின் கடுமை சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ரிஷி விதியின் போக்கிலேயேப் போக பழகிக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். வந்தனா என்ற ஒரு மென்மை மனம் படைத்த தேவதை , தனிமைச் சிறையில் அகப்பட்டு வதை படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன் மீது உயிரையே வைத்திருந்த ரம்யாவை விட்டு விலகி வந்தனாவை ஏற்றுக் கொண்டாலும், ஆறே மாதங்களில் அவள் உடல் நிலையில் மாற்றம் தோன்றி, இன்று அடிக்கடி மருத்துவமனைக்கு படை எடுப்பதே முக்கிய வேலையாகவும் இருக்கிறது. இதெல்லாம் பழகிப் போனாலும், முகத்தில் சிரிப்பு என்ற ஒன்றே மறைந்து போனதும் மறைக்க முடியாமல் போனது.தனக்கு நன்மை செய்வதாக எண்ணி இப்படித் தன் வாழ்க்கையையே கெடுத்துக் கொண்டாரே… வாழ வேண்டிய வயதில், எந்த சுகமும் இல்லாமல் சோர்ந்த முகத்துடனும், சுரத்தில்லாத பேச்சுடனும், இருப்பதோடு, அதனை ம…