Posts

Showing posts from December 25, 2011

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 3

பூசலார் நாயனார்

நீதி,நேர்மை போன்ற நற்குணங்கள் கொண்டபெருங்குடிமக்கள் வாழ்கின்ற தொண்டைநாட்டில்,திருநின்றவூர் என்றொரு கிராமம். அங்கு நம்பி ஆரூரர், “ மன்னிய சீர்மறை நாவல் நின்றவூர் பூசல்என்று போற்றிப் புகழ்ந்த மகான் பூசலார் என்பார் வாழ்ந்து வந்தார். ஆன்மார்த்த பூசையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். சிவபெருமானுக்கு பெரும் ஆலயம் எழுப்ப ஆவல் மேலிட அதற்கான நிதி வசூல் செய்ய முற்பட்டு, அது நடவாமல் போக மனம் நொந்த பூசலார்,மறையோனுக்கு உள்ளத்திலேயே ஆலயம் எழுப்ப எண்ணி, நிதி வசூலும் பெற்று, கட்டிடம் எழுப்புவதற்குத் தேவையான சகல பொருள்களும் வாங்கி ,மனத்திலேயே, அடித்தளமும் அமைத்து,உயரமாக ஆலயமும் எழுப்பி விட்டார். அதேசமயம் பல்லவ மன்னன், காடவர்கோன், காஞ்சி மாநகரில், கைலாயநாதர், ஆலயம் கட்டி முடித்திருந்தார். குடமுழுக்கு செய்வதற்கான நல்ல நேரமும் குறித்தார். ஒரு நாள் சிவபெருமான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி,
“நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீ டால யத்து நாளைநாம் புகுவோம்; நீஇங்(கு) ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்” என்று கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில்கொண்டருளப் போந்தார்.
உறக்கம் தெளி…

சிலம்பும், பெரிய புராணமும் - பகுதி - 2

இறையாண்மையும், நீதி வழுவாமையும் இரண்டையும் உயிராய் மதிக்கும் உத்தம சோழ மன்னனாம் மனுநீதிச் சோழனின் வரலாறு எக்காலத்தும் மறக்கவொண்ணா காப்பியமன்றோ?அம்மட்டும் , ஐந்தறிவு சீவனான ஒரு கன்றைத் தவறுதலாகத் தேர்க்காலில் பலியிட்ட அரசிளங்குமரனை , நீதி கேட்டு வந்த தாய்ப்பசுவிற்கு நீதி வழங்கும் வண்ணம் தம் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மன்னனின் நீதியும், தம் இறையாண்மையின் வல்லமைக்குக் கிடைத்த பெரும் பரிசாக , சிவபெருமான் நேரில் தோன்றி , இறந்துபோன தம் மகனையும்,கன்றையும் உயிர்ப்பித்துக் கொடுக்க வானோர்கள் பூமாரி பொழியும் பேரதிசயமும் நடந்தது.
தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா தாகி
முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற் கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற் புடைத்த தன்றே.

”வளவ! நின் புதல்வ னாங்கோர் மணிநெடுந் தேர்மே லேறி
அளவிறேர்த் தானை சூழ வரசுலாந் தெருவிற் போங்கால்
இளையாவான் கன்று தேர்க்கா லிடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறு மித்தாய் வந்து விளைத்ததித் தன்மை” யென்றான்.

ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்
‘தருமந்தன் வழிச்செல்கை கட’ன…