Saturday, March 14, 2020
Friday, March 13, 2020
Tuesday, March 10, 2020
கலீல் கிப்ரானின் வெருளி – சோளக்கொல்லை பொம்மை - The Scarecrow BY KAHLIL GIBRAN
கலீல் கிப்ரானின் வெருளி – சோளக்கொல்லை
பொம்மை
ஒரு முறை நான் ஒரு சோளக்கொல்லை
பொம்மையிடம், “தனிமையான இந்த வயல்வெளியில் நின்று களைத்துப்போயிருக்க
வேண்டும் நீங்கள் ” என்றேன்.
அதற்கு அவர், “அச்சமூட்டுவது
நீண்டு நிலைத்திருக்கும் அலாதியான ஆனந்தம் அல்லவா, ஆகவே
ஒருபோதும் நான் சோர்வதில்லை. "
ஒரு நிமிட சிந்தனைக்குப் பிறகு,
“ உண்மைதான்; நானும் கூட
அறிந்திருக்கிறேன் அந்த மகிழ்ச்சியை"
என்றேன் நான்.
"வைக்கோலால்
நிரப்பப்பட்டவர்களால் மட்டுமே அறிய முடியும் அதை", என்றார் அவர்.
அவர் என்னை பாராட்டினாரா அல்லது சிறுமைப்படுத்தினாரா
என்று தெரியாமலே அவரை விட்டு வெளியேறினேன்.
வருடம் ஒன்று கடந்த அந்த நேரத்தில்
தத்துவஞானியாக மாறியிருந்தார் அந்த வெருளி.
மீண்டும் அவரைக் கடந்து சென்றபோது இரண்டு
காகங்கள் அவருடைய தொப்பியின் கீழ் கூடு ஒன்று கட்டுவதைக் கண்டேன் நான்.
கலீல் கிப்ரான்
கலீல் கிப்ரான் ஒரு சோளக்கொல்லை பொம்மையிடம், “விலங்குகளையும்,
பறவைகளையும் விரட்டுவதற்காக உன்னை உருவாக்கியுள்ள உழவரின் எண்ணத்தைப் விளங்கிக்கொள்ள முடிகிறது என்னால். நீ ஒரு வெருளி
என்ற போலி உருவம்தான் என்பதை அறிந்துகொள்ளும் அறிவற்ற பரிதாபமான விலங்குகள் அவை
என்பதும் புரிகிறது எனக்கு. ஆனாலும் உன்னை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை
என்னால். மழையிலும், கொளுத்தும் கோடையிலும், உறைபனியிலும் கூட தொடர்ந்து இங்கேயே
நின்று கொண்டிருக்கிறாயே .... எதற்காக?”
அதற்கு அந்த வெருளி, அந்த விலங்குகளையும், பறவைகளையும் அச்சமூட்டும்
ஆனந்தத்திற்காக கொட்டும் மழை, கொளுத்தும் வெய்யில், உறையச் செய்யும் பனி என எதையும்
தாங்கலாம். நான் உண்மையல்ல என்பதும், என்னில் ஒன்றுமில்லை என்பதையும் அறிவேன்
நான். இருந்தாலும் அதைப்பற்றிய கவலையில்லை எனக்கு. என்னுடைய மகிழ்ச்சியெல்லாம்
அடுத்தவரை அச்சமூட்டுவதுதான் .....!”
என்னதான் சொல்ல வருகிறார் கிப்ரான் என்று தெரிகிறதா?
(1) ஊரில் இது போன்று போலிப்பெருமையுடன் இருக்கும் சோளக்கொல்லை
பொம்மைகளை புறந்தள்ளிவிட்டு முன்னேறிச் செல்லவேண்டியதுதான் .......
(2) சுதந்திரம், பேரானந்தம், சத்தியம் போன்றவற்றிற்கான
நம் போராட்டம் வெளி உலகத்துடன் இல்லை, ஆனால் அந்தப் போராட்டம் அனைத்தும் சோளக்கொல்லை
பொம்மையான நம் போலியான மனதுடன்தான்!
The Scarecrow
Once I
said to a scarecrow, “You must be tired of standing in this
lonely field.”
And he said, “The joy of scaring is a deep and lasting one, and I
never tire of it.”
Said I, after a minute of thought, “It is true; for I too have
known that joy.”
Said he, “Only those who are stuffed with straw can know it.”
Then I left him, not knowing whether he had complimented or belittled
me.
A year passed, during which the scarecrow turned philosopher.
And when I passed by him again I saw two crows building a nest
under his hat.
lonely field.”
And he said, “The joy of scaring is a deep and lasting one, and I
never tire of it.”
Said I, after a minute of thought, “It is true; for I too have
known that joy.”
Said he, “Only those who are stuffed with straw can know it.”
Then I left him, not knowing whether he had complimented or belittled
me.
A year passed, during which the scarecrow turned philosopher.
And when I passed by him again I saw two crows building a nest
under his hat.
Subscribe to:
Posts (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...