Saturday, April 23, 2016

உலக புத்தக தினம்

இன்று உலக புத்தக தினம்! வாசிப்பின் காதலர் தின வாழ்த்துக்கள் ! வாசிப்போம்.. வாசிப்போம்.. வாசித்து வாசித்து வளமும் நலமும் பெறுவோம்!

Thursday, April 21, 2016

வைராக்கியம்



பவள சங்கரி
‘இளமையில் கல்’ என்றார்கள். கற்க ஆவல் கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்கள் விருப்பம்போல கற்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே வருந்தத்தக்க விசயம். அறிவும், ஆற்றலும் இருப்பவருக்கு பள்ளிக்கட்டணம் கட்டவோ, நோட்டுப் புத்தகம் வாங்கவோ வசதியில்லாமல் ஏழ்மை வாட்டி வதைக்கலாம். எல்லா வசதியும் இருக்கும் இளைஞனுக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் போகலாம். பெற்றோரின் கட்டாயத்திற்காக மட்டுமே படித்துக்கொண்டு வருவான். இன்னும் சில குழந்தைகளுக்கோ பிறவிக் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் கல்விக்கூடம் செல்வது என்பதே பெற்றோரின் பகற் கனவாகிவிடுகிறது. இப்படி ஒரு சிலரின் வாழ்க்கையில் அடிப்படையான கல்வி என்பது ஒரு சரித்திரமாகவே மாறிவிடுகிறது.  ஆனால் எப்படியும் கல்வி கற்றே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருப்பவர்களுக்கு, அந்த எண்ணமே அவர்களுக்கு அதை ஏதேனும் ஒரு வழியில் அதை செயல்படுத்திவிடுகிறது.