உலக புத்தக தினம்

இன்று உலக புத்தக தினம்! வாசிப்பின் காதலர் தின வாழ்த்துக்கள் ! வாசிப்போம்.. வாசிப்போம்.. வாசித்து வாசித்து வளமும் நலமும் பெறுவோம்!

எழுத்தாளர்களின் தலைவிதி பெரும்பாலும் பல்வேறு நிராகரிப்புகளின் இடையேதான் நிர்ணயிக்கப்படுகிறது. இது இன்று நேற்று அல்ல.. பல காலமாக தொடர்வதுதான். உலகின் மிகச் சிறந்த படைப்பாளர்களின் ஒருவரான பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்புதான் ஹாரி பாட்டர் என்ற நூல். இந்த நூல் பிற்காலங்களில் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஆனால் ரௌலிங் இந்த புதினத்தை எழுத ஆரம்பித்தபோது உணவு, உறைவிடம், உடை என அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அல்லாடிய நிலைதான் என்பதை எத்தனைபேர் அறிந்திருப்போம்? அவர் பெரும் மன வேதனையில் இருந்த காலம் அது. தெருவோரங்களிலும், காப்பி கடைகளிலும் அமர்ந்து ஒரு பழைய தட்டச்சு இயந்திரம் மூலமாக தட்டச்சிய புதினத்தை பல பதிப்பாளர்களிடம் கொண்டு சென்று தவம் கிடந்தும் அவர்கள் பதிப்பிட மறுத்தனர். இறுதியாக ஒரு மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி என்ற நிறுவனம் 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டு வெளியிட அத்துணையும் மிக விரைவிலேயே விற்றுத் தீர்ந்து சரித்திரம் படைக்க ஆரம்பித்துவிட்டது!

Comments

Popular posts from this blog

உறுமீன்

யானைக்கும் அடி சறுக்கும்.............

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'