Friday, September 18, 2015

குற்றமும் தண்டனையும்! (புறநானூறு)


பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார். 
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி. 
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
purananooru
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!

Wednesday, September 16, 2015

என்றும் இன்சொல் பேசுவோம்!


பவள சங்கரி

ஒரு பிடியும் எழு களிரும்!

புறநானூறு
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!

Tuesday, September 15, 2015

உருவமில்லாதது!


பவள சங்கரி




அதில்லாமல் இதுவும் இல்லை
அதிருந்தாலும் இதிலேதுமில்லை
அதுவும் இதுவுமிருந்தாலும்
எதுவும் இல்லாதிருந்தாலும்
எல்லாமே எப்போதும் இருக்கும்
கொடுக்கலும் வாங்கலும் இருந்தாலே
இதுவும் அதுவும் உயிரோடிருக்கும்
உருவமில்லாததற்கு மதிப்புமில்லை
உறைந்திருக்க உத்திரவாதமுமில்லை
உறுத்தலில் திருத்தமும் சாத்தியமில்லை
நிறைத்தலில் நீட்சியும் தேவையில்லை
மறைத்தலில் மாட்சிமையும் 
மாண்பும் இல்லவே இல்லை!