பவள சங்கரி
அதில்லாமல் இதுவும் இல்லை
அதிருந்தாலும் இதிலேதுமில்லை
அதுவும் இதுவுமிருந்தாலும்
எதுவும் இல்லாதிருந்தாலும்
எல்லாமே எப்போதும் இருக்கும்
கொடுக்கலும் வாங்கலும் இருந்தாலே
இதுவும் அதுவும் உயிரோடிருக்கும்
உருவமில்லாததற்கு மதிப்புமில்லை
உறைந்திருக்க உத்திரவாதமுமில்லை
உறுத்தலில் திருத்தமும் சாத்தியமில்லை
நிறைத்தலில் நீட்சியும் தேவையில்லை
மறைத்தலில் மாட்சிமையும்
மாண்பும் இல்லவே இல்லை!
மிக்க நன்றி அன்பு சகோதரரே. தங்களுடைய அன்பான ஒத்துழைப்பிற்கு என் பணிவான வணக்கங்கள் சகோ.
ReplyDeleteஅன்புடன்
பவளா