Thursday, April 6, 2017

ஆணிவேர்!



Poetry by Lee Si-young

Translated by Chae-Pyong Song and Anne Rashid

தமிழில் - பவள சங்கரி

Taebaek Mountain, Photography by Kim Kyung-sang
Taebaek Mountain, Photography by Kim Kyung-sang



வளியினூடே ஏகும் அம்பாய்
இலக்கைப் பற்றிக் கொண்ட
அதன் சர்வமும் தவிக்கிறது.
எம் மொழிமட்டுமே அவ்வளியினூடே
ஊடுறுவி எவருடைய இதயத்தையேனும்
தீண்டக்கூடுமாயின், அதன் ஆணிவேரையே
துளைக்கக்கூடுமாயின், 
ஆனமட்டும் ஆட்டிவைத்துவிடுமதை.
கங்கின் விதை போன்றோ,
முதற்காதல் கீதம் போன்றோ
சர்வமாய் மலர்ந்து கிடப்பதேயது.


Poetry by Lee Si-young
시(詩)


화살 하나가 공중을 가르고 과녁에 박혀
전신을 떨듯이
나는 나의 언어가
바람 속을 뚫고 누군가의 가슴에 닿아
마구 떨리면서 깊어졌으면 좋겠다
불씨처럼
아니 온몸의 사랑의 첫 발성처럼
Like an arrow that goes through air
and sticks to the target,
its whole body quivering.
If only my language
could go through the wind
and touch someone’s heart
and enter it deeply, shaking hard.
Like a seed fire,
or like the first song of love
made with the whole body.

Tuesday, April 4, 2017

ஆக்கத்தின் முரண்!



பளபளவென தோலும் வாலும் 
சரசரவென நெளிந்து வளைந்து
விறுவிறுவென சாலங்கள் புரிந்து
கிலுகிலுவென கோலங்கள் வடித்து
கடகடவென சட்டை உரித்து 
படபடவென பாத்திரம் மாற்றி
சிலுசிலுவென மீண்டும் படமெடுத்தது!

Monday, April 3, 2017

நறுக் .. துணுக்



மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்க்கும் நாய்க்கும் உடனே அந்த கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை.

பழைய புத்தக வாசனையில் ஒரு பரிமளம் (perfume) இருக்கிறது. புத்தகப் பிரியர்கள் கவனிக்க...!

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் 10 தொழில்களில் ஒன்று யோகாசனம்!

இந்தியாவில் மட்டும் காச நோயால் தினசரி 1,400 பேர் உயிரிழக்கிறார்கள் . 18 இலட்சம் பேர் காச நோயால் இந்தியா, இந்தோநேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா சீனா போன்ற நாடுகளில் உயிரிழந்துள்ளனர். 2015 இன் கணக்கெடுப்பு இது. 2016 இல் இந்தியாவில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 33,820 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் இந்த காச நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

பொன் மொழிகள்!




தனிமனிதத்துதி பாடியே தன் தலையில் தீமூட்டிக்கொள்வோர் தினத்திற்கு வாழ்த்துகள்! :-)


காரியத்திற்காய் பொய்யாய் அன்பு காட்டுவதும்கூட கருணைக்கொலை தான்!

வேண்டும்போது அணைப்பதற்கும் விலக்கும்போது விலகுவதற்கும் விலைமாதரல்ல மரணம்!

ஒவ்வொரு மூச்சிலும் தன்னைப்போல் பிறரையும் நேசித்து சுவாசித்தல் இனிது!

மீனுக்காக வலை விரிப்பவனுக்காகவும் காத்திருக்கிறது ஒரு திமிங்கலம்!

படைத்தவனின் கணக்கை மாற்றியமைக்க எந்த சாணக்கியத்தனமும் துணை நிற்காது!

ஆக்கத்தைவிட அழிவிற்காகத்தான் அதிகமாக மெனக்கெடவேண்டும் என தெரிந்தும் .. ஏன்?

தன்மானம் காக்கும் தழும்புகளை மறைக்கத் தேவையில்லை!

வெளியேற எண்ணும்முன் உள்வந்த 
காரணத்தை கருத்தில் கொள்!

ஆகச்சிறந்த அடுத்த தலைமையை உருவாக்குபவரே நல்ல தலைவர், தலையாட்டும் தொண்டர்களை உருவாக்குபவர் அல்ல!

இழப்பை எண்ணி வருந்துவதை விட்டு
வரவை எண்ணி வாழ்ந்து பார்!

நீ வடிவமைக்காத உன் வாழ்வை இன்னொருவர்
எட்டு கோணலாக்கி விடக்கூடும்!

அசந்தால் அச்சம் ஆளைத் தீர்த்துவிடும்
துணிந்தால் எதுவும் துச்சம்தான்!

அடுத்தவர் வாய்ப்பைத் தட்டிப்பறித்து தாம் வாழ எண்ணுபவன்
கெடுப்பார் இலானும் கெடுவான்.





அட...

நம் இந்தியாவில் தீவிரவாதத்தினால் இறந்தவர்களைவிட 6 மடங்கு அதிகமாக காதல் விவகாரத்தினால்தான் இறந்திருக்கிறார்கள்! 2001 - 2015 கணக்கெடுப்பில் மட்டும் 38,585 பேர் காதலுக்காக தற்கொலை அல்லது கொலை மூலமாக இறந்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் இதில் முதல் இடம்!

சூரியசக்தி



சூரியசக்தி 2020க்குள் மாபெரும் மின்சக்தியாக உருமாறி நம் இந்தியாவின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாகப்போகிறது! இதில் ஒரே நெருடலான விசயம் பேனல்களின் அதிக விலை. இதற்குரிய விலை குறைவான மாற்று கண்டுபிடிப்புகளை இஸ்ரோ ஆய்வில் உடபடுத்தியுள்ளதாக இதன் தலைவர் கூறியுள்ளது வரவேற்பிற்குரியது. இந்த ஆண்டிலேயே சூரிய சக்தியால் பெறப்பட்ட அதிக மின்சக்தி பொது விநியோகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது!

தர வரிசைப் பட்டியல்!


கல்வித்தர வரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே முதல் இடத்தை, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஐடி தக்க வைத்துக்கொண்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கான தர வரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. பங்களூருவைச் சார்ந்த அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த 10 கல்வி நிறுவனங்கள் சிறப்பான நிலையை பெற்றுள்ளன.

17.5 கி.மீ பேருந்து பயணத்திற்கு ₹1 கட்டணம்!


கல்கத்தாவில் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று சாண எரிவாயு மூலமாக இயங்கும் பேருந்தை 17.5 கி.மீ தொலைவிற்கு ₹1  மட்டும் பொது மக்களிடமிருந்து கட்டணமாகப் பெற்றுக்கொண்டு இயக்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 15 பேருந்துகளை மற்ற வழித்தடங்களிலும் இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இது இயற்கை மாசுபடுவதிலிருந்து கட்டுப்படுத்துவதோடு விவசாயிகளுக்கு மாற்று வருமானத்தையும், பொது மக்களுக்கு இந்தியாவிலேயே மிகமிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மிக அதிக அளவில் மாடுகள் இருக்கின்ற பீகார், கர்நாடகா, தமிழ்நாடு ...

மது விற்பனை சாகசம்!



நீதித் துறையின் மது விற்பனை தொடர்பான தீர்ப்பிற்கு மாற்றுவழி காணும் மாநில அரசுகள்! ஒவ்வொரு மாநிலமும் மது விற்பனையில் வரக்கூடிய வருமானத்தில் சுமாராக பாதி தொகை இழப்பதால் மாநில நெடுஞ்சாலை என்பதை மாவட்ட நெடுஞ்சாலையாக பெயர் மாற்றம் செய்யும் முயற்சி... ! மக்கள் நல்வாழ்வில் நீதித் துறையும், வருமானத்தைக் குறிக்கோளாகக் கொண்ட மாநில அரசுகள் இனி என்ன செய்யப்போகின்றன? இதில் மாநில நெடுஞ்சாலையின் சுங்கச் சாவடிகளின் கட்டணம் வேறு அதிகரித்துள்ளது..:-( தமிழக அரசு மது விற்பனை ...

வங்கி .. வங்கி..



வைப்புத் தொகைக்கு இன்று முதல் 0.1% வட்டி குறைப்பு. ஸ்டேட் வங்கியில் இன்று முதல் சிறுசேமிப்பு கணக்கிற்கு வைப்புத் தொகை கட்டாயமக்கப்பட்டுள்ளது. போதிய வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்று முதல் மாதத்திற்கு 3 முறை மட்டும் பணம் எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மற்ற வங்கிகளும் விரைவில் இதனைத் தொடரும். அனைத்து ஸ்டேட் வங்கிகளும் ...

பயணச்சீட்டு வாங்குபவரா நீங்கள்?


ரயில் பயணிகளால் ஆண்டுதோறும் இரயில்வேத் துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு 35,000 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 39,000 கோடியாக உயர்ந்துள்ளது. பயணச் சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களால் ஏற்படும் இழப்பு ஒழுங்காக, நேர்மையான முறையில் பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்பவர்கள் தலையில் தான் விடிகிறது. உரிமையைக் கேட்டு போராடும் பலர் கடமையைப் பற்றி நினைப்பதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.. :-( சில பிரிவுகளில் பாதிக்கும் மேலான பயணிகள் ...

மோப்ப சக்தி



பவள சங்கரி   கரடிகள் 18 மைல்கள் தள்ளியிருக்கும் உணவை மோப்பம் பிடிக்க வல்லவை. மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.   மனிதர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் நாய்க்கும் உடனே கொட்டாவி தொற்றிக்கொள்ளும்.

மத்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!



வரும் நாட்களில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கப்போகிறது. இருக்கும் வெப்பத்தைவிட உணரக்கூடிய வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளை களைவதற்கு அனைத்து மாநிலங்களும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து அரசு மருத்துவமனைகளில் இதற்கென தனியாக சில படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றும் அவை நல்ல காற்றோட்டத்துடனும், குளிர் சாதன வசதி கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டன. ...

உச்சநீதி மன்றத்தை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசு



நேற்று உச்சநீதிமன்றம் காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்திரவிட்டும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. உச்சநீதி மன்றம் கர்நாடகத் தலைமை செயற்பொறியாளருக்கும், மத்திய அரசின் விவசாய செயல் அலுவலருக்கும் இது தொடர்பான ஆணையை ஏன் பிறபிக்கக்கூடாது? தமிழர்களின் உயிர் நாடியான குடிநீர் பிரச்சனையை எந்த வகையிலேனும் தீர்த்தாக வேண்டிய கடப்பாடு உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.

பல இலட்சம் தொழிலாளர்களின் பணியிழப்பை தடுக்கவேண்டும்



விவசாய விளைப்பொருளான பஞ்சை ஊக்கச் சந்தையிலிருந்து (comodity sales) நீக்கி, ஜவுளித்துறையையும், பின்னலாடை உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அந்நிய செலாவணி நிலையை உயர்த்தினால் அனைத்துத் துறையினரும் பயன் பெறலாம். பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் நீங்கும்..




கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...