Friday, December 10, 2021
கல்விக்கோ விஐடி வேந்தர் ஐயாவிற்கு அகவைத் திருநாள் வாழ்த்துகள்!
கல்விக்கோ
விஐடி வேந்தர் ஐயாவிற்கு அகவைத் திருநாள் வாழ்த்துகள்!
எப்படியும்
வாழலாமென்பது சாமான்யனின் கணக்கு
இப்படித்தான்
வாழவேண்டுமென்பது வல்லவனின் கணக்கு
புல்லும்
ஆயுதமாய் கல்லும் காவலரணாய்
சொல்லும்
வேதமாய் திக்கெட்டும் சாதனையாய்
சகலமும்
மனிதமாய் எண்ணமும் எழுத்தும்
சர்வமும்
தமிழுக்காய் வாழ்வெலாம் வண்ணமாய்
எளிமையே
இயல்பாய் உறவுகளெலாம் விருட்சமாய்
விடியலின்
வேர்களாய் விண்ணின் மேகங்களாய்
மண்ணில்
விழுதுகளாய் மனமெனும் கோயிலில்
நல்லவை
நிறையவும் அல்லவை விலகியோடவும்
தரணியெலாம்
பரவுபுகழ் தஞ்சமென தனையுயர்த்தவும்
இனிவரும்
காலங்கெலாமும் இன்னமுதாய் இன்னிசையாய்
துன்பமில்லா
துயரில்லா இன்பநிறை பொழுதுகளுடன்
பல்லாண்டு
பல்லாண்டு பலகோடி நூறாண்டு
வாழ்வாங்கு
வாழ்ந்து வள்ளன்மையுடன் வலம்வர
சர்வவல்லமையாளன்
சர்வேசுவரனை தாள்பணிந்து வணங்குவாம்!!
#பவளா
Tuesday, December 7, 2021
புதிதாய்ப் பிறப்போம்!
வாழப்பழகு புள்ளின் அரசனைப்போல!
எழுபதாண்டுகள்
வாழும் வரம்பெற்ற கழுகு
நாற்பதிலேயே
முதுமைக் கோலம் அதற்கு
கொத்தித்தின்ன
இயலாத கூர்மையிழந்த அலகு
உணவைக்கவ்வி
இழுக்கும் வலுவிழந்த கால்நகங்கள்
பறக்கும்
சக்தியின்றி மார்புக்கச்சையான சிறகுகள்
அத்தனையும்
மீட்டெடுக்கத் துணியும் சாகசமாய்
மலை
உச்சியின் பாறையில் அமர்ந்து
அலகெலாம்
தேய்ந்து உதிரும்வரை உரசியும்
ஓய்ந்துபோகாமல் புதிய கூரிய அலகுமுளைக்கக்
காத்திருந்து
முளைத்தவுடன் வலுவிழந்த கால்நகங்களை
பிய்த்தெறிந்து
புதுநகங்கள் முளைக்கக் காத்திருந்துப்பின்
கனத்துப்போன
சிறகுகளையும் உதிர்த்து அடுத்து
புத்தம்புதிய
சிறகுகள் முளைக்க மறுபிறவியுடன்
மலையோடும்
மடுவோடும் முட்டி மோதி
முதுமை
தொலைத்த இளமையுடன் வளமாக
வாழும்
வல்லமையை வளர்த்துக்கொள்!
புள்ளின்
அரசன் கழுகைப்போல் வாழக்கற்றுக்கொள்!!
Sunday, December 5, 2021
வளி(ழி)யில் வீழாத வாழ்க்கைப்படகு!
கூட்டுப்புழுவாய்
ஒடுங்கி
குலைநடுங்கி
கிடந்தாலும்
காட்டுத்தீ
கழிவிரக்கமின்றி
ஊரெல்லாம்
உசுப்பிவிட்டு
கட்டுக்கடங்காத
கயமையுடன்
தொழிலையும்
பணியையும்
முடக்கிப்போட்டு
முடிவிலியாகி
அலைஅலையாய்
அதிர்வூட்டி
அச்சுறுத்தினாலும்
குடிசையில்
குடும்பமாய்
தொழிலாற்றி
காலத்தின்
தேவையாம்
முகக்கவசமும்
கையுறை
நாப்கினும்
தயாரித்து
இன்று
நகரங்களுக்கும்
நாடுகளுக்கும்
நன்மையளித்து
தாமுயர்ந்து
தரணியாளும்
குடிசைத்தொழில்
காலத்தின்
கட்டாயம்
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...