பவள சங்கரி
இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த
நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும்.
எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ
அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்..
ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில்
ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி
வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்..
நாம் அதை அனுபவிக்கும் வெகு காலத்திற்கு முன்பே நமது சுக
துக்கங்களைத் தெரிவு செய்து விடுகிறோம் நாம்.
சோகம் என்பது இரு தோட்டங்களுக்கும் இடையிலானதோர் சுவர்.
உம்முடைய சுகமோ அல்லது துக்கமோ உயர்ந்து நிற்கும்போது
அப்பெரும் புவனமே தாழ்ந்து போகிறது.
பெட்பு என்பது வாழ்வின் பாதி; அலட்சியம் என்பது இறவின் பாதி.
இன்றைய நம் சோகத்தின் மிகக் கைப்பானதொன்று என்றால் அது
நம் நேற்றைய இன்பமே.
அவர்கள் எம்மிடம், “இப்புவியின் இன்பங்கள் மற்றும் அந்த
மறு உலகின் அமைதிக்கும் இடையிலானதை தெரிவு செய்தாக வேண்டும் நீவிர்” என்றனர்.
மேலும் அவர்களிடம், “ இப்புவியின் இன்பங்கள் மற்றும் மேலுலகின்
அமைதி என இரண்டையும் தெரிவு செய்தேன். காரணம் எம் மனதிலந்த மாபெருங்கவி யாத்த அக்கவியோ தேடுதலோடு இசைக்கவும் செய்கிறது” என்றேன், யான்..
நம்பிக்கை என்பது சிந்தனைச் சாத்தினால் என்றுமே நெருங்க
முடியாத மனதினூடேயானதோர் பாலைவனச்சோலை
உமது உயரத்தை அடையும் தருணம் மேலும் நீவிர் அந்த இச்சைக்காக
விருப்பம் கொள்வீர்; மற்றும் உணவு வேட்கைக்காகவே பசி கொள்வீர் நீவிர்; மற்றும் மேலும் பெரும் நீர்வேட்கைக்காக
தாகம் கொள்ளக்கூடும் நீவிர்.
அந்த வளியிடம் உம் இரகசியங்களைப் பகிரும்போது அதனை அது
மரங்களிடம் பகிருதலால் அவ்வளியை குறை சொல்லலாகாது,
நீவிர்.
அந்த வசந்தகால மலர்களனைத்தும் அத்தேவதைகளின் காலை உணவு
மேசையினுடன் சம்பந்தப்பட்ட கூதாளியின் சுவனங்கள்தாம்.