Friday, March 8, 2013

மகளிர் தின வாழ்த்துக்கள்!


அன்புத் தோழிகளுக்கு ,

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! இன்று புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு புத்துணர்வு. வருடா வருடம் வருகிற ஒரு தினம் என்றாலும், ஓடுகிற ஓட்டத்தில் மூச்சிறைக்காமல் சற்றே நின்று, நிதானித்து, ஓடிய பாதையை மெல்லத் திரும்பிப் பார்த்து, கடந்து வந்த கரடு, முரடுகள்,  பஞ்சுப் பொதிகள், மலரணைகள்,  மனித நேயச் சாரல்கள் என அனைத்தையும் அசை போடும் ஒரு இனிய தருணமாக இருக்கிறது. உதறித்தள்ள வேண்டிய உறுத்தல்களை சட்டை செய்யாமல், நல்ல நினைவுகளை அசை போட்டு மகிழ்வுறும் இனிய தருணமாக அமைத்துக் கொண்டால் அடுத்த படியை எட்டி வைக்க அது உதவி செய்யும் இல்லையா... வாழ்த்துக்கள் தோழிகளே. 


அன்பிற்கு அச்சாரமாய் அன்புத்தோழி ஜெயஸ்ரீ ஷங்கர் எமக்களித்த வாழ்த்துப்பாவை மனமகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறேன் நன்றி தோழி.

வல்லமைப்  பெண்மணி பவளசங்கரி..!



பாரதி கண்ட புதுமைகளை
கனவுகளாய்  மறையாது
நிழலாய் கண்ட மாதருக்குள்
நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ
அழகாய் எழுந்தவள் நீ..!

நமக்கேன் வம்பென பேசாமல்
'சரவணன் மீனாட்சி'யில் மனம் மகிழ
புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல்
அகத்து பெண்மணிகளின் வல்லமையை
கோபுரத்திலேற்றிக்   காட்டிய
சாபமெனும் பெயரில் கல்லெனக்
கிடந்திடாத வல்லமைத் தடம்
பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!

உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள்
உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி 
கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது
வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி
உன்னதத்தின் மேன்மைகளை
உழைப்பவளின் உன்னதத்தை
பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!

புத்தாண்டுப் பரிசுகளாய்
'விடியலின் வேர்'களை  வெளிச்சத்துக்கு
அழைத்து வந்து - பெண்மை வாழ்க..!
எனக் கூத்திட்டு  - சக்திதனை
நிர்கதியென நிறுத்தாது..!
வானம்பாடியாக்கி  திக்கெட்டும்
பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
     
ஓயாத உழைப்பில்
தன்னலமற்ற தியாக தீபமேற்றி
சாதனைப் பெண்களின் அணிவரிசையில்
தீபம் ஏந்தும் பவளம் நீ ..!
வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
இன்றைய உலக மகளிர் தினத்தில்
உந்தனை சிந்தனை செய்வதில்
செருக்கடைகிறது எந்தன் மனம்..!
உயரட்டும் உந்தன் கொடி பவளசங்கரி..!

=======================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.

 உங்கள் அன்பிற்கு நன்றி ஜெயஸ்ரீ. இதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment