பவள சங்கரி
'மூடீஸ்’ (Moodys) என்பது ஒரு அகில உலக பொருளாதார ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி வெளிநாடுகளின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் பாதிப்பு இன்றி இந்தியா தன்னுடைய சுய பொருளாதார முன்னேற்றம் மூலமாக, 2015 - 2016 ம் ஆண்டில், ஜி 20 நாடுகளின் முதன்மையாக 7.75 சதவிகித பொருளாதார வளர்சியை அடையும் என்று அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவின் சுய பொருளாதார முன்னேற்றமே காரணம் என்கிறது இந்த ஆய்வறிக்கை. துருக்கி, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைவிட இந்தியா பல வகையில் வளர்ச்சி எல்லையை அடையப் போவதும் உறுதி என்கிறது இந்த ஆய்வறிக்கை. மேலும் நம் இந்திய அரசின் உறுதியான பொருளாதாரக் கொள்கைகளின் பலனாக பண வீக்கம் முற்றிலும் கட்டுக்குள் வரும் என்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் பொருளாதார நிலையும், சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும் கூட நம் இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது என்பதும் மிகவும் மகிழ்ச்சியான செய்தி..
நன்றி : வல்லமை