Thursday, September 19, 2013
Tuesday, September 17, 2013
பிரசவம் எனும் மறுபிறவி!
பவள சங்கரி
பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறு பிறவி . ஒரு குழந்தை கருவாகி, உயிராகி, இந்த பூமியில் பிறப்பதற்குள் ஒரு தாய் படும் துயர் சொல்லி மாளாது. ஆனாலும் முகம் தெரியாத அந்த உயிரின் நினைவே அத்தாயின் அத்துனைத் துன்பங்களையும் மறையச்செய்துவிடும். ஒரு காலத்தில் பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து, அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே குழந்தைப் பேறுக்குத் தயாராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலையே வேறு. பெரும்பாலும் இன்று இளம் வயது திருமணங்கள் குறைந்துள்ளது எனலாம். நன்கு படித்து ஓரளவிற்கு நல்ல நிலைக்கு வந்த பின்பே பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்று உறுதியாக இருப்பதோடு, குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள். மருத்துவ விஞ்ஞானம் இன்று பெருமளவில் பரந்து விரிந்துள்ள சூழ்நிலையில் பல நவீன சிகிச்சை முறைகள் வாழ்க்கையை ஓரளவிற்கு எளிமையாக்கியுள்ளதோடு குழந்தை பேறு போன்ற சுகமான சுமைகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் பிரசவ முறைகளிலும் பல மாற்றங்களும், நவீன சிகிச்சை முறைகளும் வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ?
Sunday, September 15, 2013
கற்றல் எனும் சுடரொளி!
பவள சங்கரி
கற்றல்மட்டுமே என்றும் மார்கண்டேயனாக்குகிறது
காற்றாய் நம்மை கனமில்லாமல் சுமந்துசெல்வதும் கற்றல்தான்!
அறுசுவையையும் அடிச்சுவடியாய் ஆக்கிவிடுகிறது
மறுபதிவையும் பதமாய் ஆக்கி்த்தந்து ஆச்சரியமூட்டுகிறது!
படரக்கற்பதும் சுடராய் ஒளிவீசவும் பக்குவமாய் பாட்டெழுதவும்
தனலும் தகிக்காமல் நந்தலாலாவாய் தீண்டுமின்பம் பெறச்செய்கிறது!
எச்சத்தின் ஆழத்தில் விழுதுபரப்பிய மரமானாலும் ஆணவமலத்தின்
மிச்சத்தையும் பட்டறிவின் சொச்சத்தையும் பக்குவமாய் விலக்கிவிட்டது!
துரோணாச்சாரியர்களும், ஏகலைவர்களும் போதித்த பாடங்களின்
சாரங்களை சமத்தாய் உள்வாங்க சாந்தமும் சத்தாயானது!
சேர்ந்த மண்ணின் தன்மையை தன்னலமாக்கிய தரம்
தானின்றி அமையாது உலகு என்ற தனித்தன்மையின் தன்னடக்கம்!
சூதையும் வாதையும் சுனாமியாய் வீறுகொண்டு அழித்தாலும்
பேதையாய் வாழும் மாந்தருக்கு நிதானத்தையும் போதிக்கிறது!
காட்சிகளற்ற பார்வையின் வீரியமும் மாசற்ற சோதியாய்
பறவையாய் பாசத்துடன் நேசமும் ஏற்கும் நம்பிக்கையாய்!
சரசரத்து வழிகாட்டும் சருகுகள்கூட தீயாய் அழிக்கும் தீமைகளை
பரபரப்பாய் இயங்கும் வாழ்க்கைக்குக்கூட பாதையமைக்கும் மாயம்!
படத்திற்கு நன்றி:
http://www.google.co.in/imgres?imgurl=http://www.littlenaturalcottage.com/wp-content/uploads/2011/07/521993Little-Girl-Learning-Her-Abc-s-Posters.jpg&imgrefurl=http://www.littlenaturalcottage.com/should-a-girl-go-to-college/&h=450&w=338&sz=31&tbnid=0yz6TcfOG5P0PM:&tbnh=84&tbnw=63&zoom=1&usg=__3Eb1bLuXAMemE00qmCWn76qUsTk=&docid=RkAV1RpH2wGT0M&sa=X&ei=JZI2Uoq4J8e4rAeUooFg&ved=0CDAQ9QEwAQ&dur=4777
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...