Posts

Showing posts from August 1, 2010

ஊர்ப் பழமை..............

ஊர்ப் பழமை.......... நூல் குறிப்பு ; நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை " ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம் . பக்கங்கள் _ 320 விலை _ ரூ. 150/ வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு. அலைபேசி: 9894717185 மின் அஞ்சல்: visuaruran@gmail.com. இணையத் தமிழில் பழமைபேசியின் பங்களிப்பு சால சிறந்தது என்றும், இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தனக்குள் ஒரு நிறைவு உண்டானதையும் மற்றும் அவருடைய பன்முகத் திறமையை சிலாகித்தும், உலகத் தமிழர் அமைப்பின், தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்களின் முன்னுரையுடன், பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய

கடவுச்சீட்டு. ...........எங்கே..........?

Image
பயணங்கள் பல நேரங்களில் சுகமான அனுபவங்களைக் கொடுத்தாலும், சில நேரங்களில் சிறு கவனக் குறைவுக் கூட பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும். அதுவும் அயல் நாட்டுப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சென்ற டிசம்பர் மாதத்தில் தான் சென்றிருந்தோம். குளிரா அது.....? அம்மாடியோவ்......... நம்ம எடைக்கு மேல இரண்டு பங்கு எடைக்கு உடை வேறு...... அப்பத்தான் அந்த குளிர்ல இருந்து கொஞ்சமாவது தப்பிக்க முடியும். இந்த குளிரில் தான் நியூ ஜெர்சியில் விஞ்ஞானியாகப் பணி புரிந்துக் கொண்டிருக்கும் இருக்கும் என் மகள் வீட்டிலிருந்து, சிகாகோ மாநிலத்தின் ஐயோவா நகரத்தில் கணினி பொறியாளராகப் பணிபுரியும் என் மகன் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடிவெடுத்திருந்தோம்.ஐயோவாவிற்கு செல்ல நியூயார்க் லகார்டியா விமான நிலையத்திலிருந்து ஐயோவா மோலின் விமான நிலையம் செல்ல இரண்டு விமானங்கள் மாற்றிச் செல்ல வேண்டும். நியூஜெர்சியைவிட ஐயோவா நகரத்தில் மிக மோசமான பனியாக (-10dec) இருந்த காரணத்தினால் மேலும் கனமான குளிர் அங்கி எங்கள் இருவருக்கும் வாங்க வேண்டியிருந்தது. நான் என் கணவரு

ஆனந்தம்.........பரமானந்தம். _ திரு சுகி சிவம்

Image
நேற்று ஈரோடு புத்தகத் திருவிழா முழுவதுமாகக் களை கட்டியிருந்தது. சொல்லின் செல்வர் திரு சுகி சிவம் அவர்களின் பேச்சு, அத்துனை உள்ளங்களையும் கட்டி இழுத்து வைத்திருந்தது என்றால் அது மிகையாகாது. அரங்கு நிறைந்த காட்சியாக மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில், 'pin drop silence', என்பார்கள், அப்படி ஒரு அமைதியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய்க்கொண்டிருப்பதற்கு, இதுவே ஒரு சான்று. காரணம் அரங்கில் இருந்த பெரும்பாலானவர்களின் கைகளில் சில புத்தகங்களாவது இருந்தது. ஐயா சுகி சிவம் அவர்கள் கூறியது போல, வெளிநாடுகளில் கொடுப்பது போன்ற அங்கீகாரம் நம் ஊர்களில் சமூகச் சேவை ஆர்வலர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்பதும் வருந்தக் கூடிய விசயம்தான். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் அருமையான 'விடுதலை வேள்வி' எனும் புத்தகங்களை அடியேனும் ஓரளவிற்குப் படித்திருக்கிறேன். அதற்குப் பின்னால் இத்துனை பெரிய உழைப்பு இருப்பது நேற்றுதான் தெரிந்தது. உயர்ந்த சேவைக்கு உரிய அங்கீகாரம்தான், மற்றவர்களையும் இத்தகையச் சேவைகளுக்கு ஊக்குவிக்கக் கூடியது என்பதுதானே நிதர்சனம்

மழையின் கீதம் _ கலீல் ஜிப்ரான்

Image
நான் சொர்க்கத்திலிருந்து கடவுளால் துளிக்கப்பட்ட, புள்ளியிட்ட வெள்ளி நூல்களாவேன். இயற்கை பிறகு நிலத்தையும், பள்ளத்தாக்கையும் அணி செய்வதற்காக என்னை எடுத்துச் செல்கிறது. நான் வைகறையின் மகளால் தோட்டத்திற்கு அணி சேர்த்து அழகூட்டுவதற்காக, இஸ்தாரின் மகுடத்திலிருந்து பறிக்கப்பட்ட அழகான முத்தாவேன். நான் அழும்போது, குன்றுகள் சிரிக்கின்றது. நான் பணிவுடன் இருக்கும்போது, அந்த மலர்கள் கொண்டாடுகின்றன. நான் சிரம் தாழ்த்தும் போது, அனைத்துப் பொருட்களும் பூரிப்படைகின்றன. நிலமும் சிறு முகிலும் காதலர்கள் அவர்களிடையில் நான் ஒரு கருணையின் தூதுவன் ஆவேன். நான் ஒருவரின் தாகம் தணிக்கிறேன் நான் மற்றவரின் பிணியைப் போக்குகிறேன். இடியின் குரல் என் வருகையை தெரிவிக்கின்றது. வானவில் என் செய்கையை அறிவிக்கின்றது. நான் பித்துப் பிடித்த மூலங்களின் பாதத்தில் புறப்பட்டு, எழுச்சியுற்ற மரணச் சிறகுகளின் கீழ் முடிவுறும் உலக வாழ்வைப் போன்றவன். நான் கடலின் இதயத்திலிருந்து மேலெழும்பி, தென்றலுடன் உயரப் பறக்கிறேன். என் தேவை உள்ள நிலத்தைக் கண்டால், நான் கீழே சென்று