Monday, August 2, 2010

மழையின் கீதம் _ கலீல் ஜிப்ரான்


நான் சொர்க்கத்திலிருந்து கடவுளால் துளிக்கப்பட்ட,
புள்ளியிட்ட வெள்ளி நூல்களாவேன்.
இயற்கை பிறகு நிலத்தையும், பள்ளத்தாக்கையும்
அணி செய்வதற்காக என்னை எடுத்துச் செல்கிறது.

நான் வைகறையின் மகளால்
தோட்டத்திற்கு அணி சேர்த்து
அழகூட்டுவதற்காக, இஸ்தாரின்
மகுடத்திலிருந்து பறிக்கப்பட்ட
அழகான முத்தாவேன்.

நான் அழும்போது, குன்றுகள் சிரிக்கின்றது.
நான் பணிவுடன் இருக்கும்போது, அந்த
மலர்கள் கொண்டாடுகின்றன.
நான் சிரம் தாழ்த்தும் போது, அனைத்துப்
பொருட்களும் பூரிப்படைகின்றன.

நிலமும் சிறு முகிலும் காதலர்கள்
அவர்களிடையில் நான் ஒரு
கருணையின் தூதுவன் ஆவேன்.
நான் ஒருவரின் தாகம் தணிக்கிறேன்
நான் மற்றவரின் பிணியைப் போக்குகிறேன்.

இடியின் குரல் என் வருகையை தெரிவிக்கின்றது.
வானவில் என் செய்கையை அறிவிக்கின்றது.
நான் பித்துப் பிடித்த மூலங்களின்
பாதத்தில் புறப்பட்டு, எழுச்சியுற்ற
மரணச் சிறகுகளின் கீழ் முடிவுறும்
உலக வாழ்வைப் போன்றவன்.

நான் கடலின் இதயத்திலிருந்து
மேலெழும்பி, தென்றலுடன் உயரப் பறக்கிறேன்.
என் தேவை உள்ள நிலத்தைக் கண்டால்,
நான் கீழே சென்று மலர்களையும்
மரங்களையும், இலட்சக்கணக்கான,
சிறு வழிகளில் ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

நான் என்னுடைய மென்மையான விரல்களினால்
சன்னல்களை சாந்தமாகத் தீண்டுகிறேன்.
மற்றும் என்னுடைய அறிவிப்பே,
வரவேற்பு கீதமாகும்.அனைவரும் அதனைக்
கேட்கலாம், ஆனால் உணர்ச்சிமிக்கவரே
புரிந்து கொள்ள முடியும்.

காற்றில் உள்ள வெப்பமே என்னை பிரசவிக்கிறது.
ஆனால் அதன் கைமாறாக நான் அதைக் கொல்கிறேன்.

பெண் ஆணிடமிருந்து எடுத்துக் கொண்ட
சக்தியைக் கொண்டே அவனை
வெற்றி கொள்வது போல.

நான்தான் கடலின் ஆழ்ந்த மூச்சாகும்;
நிலத்தின் நகைப்பாகும்;
சொர்க்கத்தின் கண்ணீராகும்.

அதனால் காதலுடனே _

ஆழமான கடலின் பாசத்தின் பெருமூச்சாவேன்: வண்ணமயமான நிலத்தின் ஆன்மாவின் நகைப்பு: சொர்க்கத்தின் நினைவுகளின் கண்ணீர்.

6 comments:

  1. நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. It is really wonderful and interesting. Very rare to see this type of writers. Nice story

    ReplyDelete
  3. நன்றி திரு வானம்பாடி அவர்களே!

    ReplyDelete
  4. நன்றி திரு செந்தில்

    ReplyDelete
  5. நல்ல பகிர்வுனு நான் பின்னூட்டம் போட்டா, உடனே நன்றி திரு.ஈரோடு கதிர்னு பின்னூட்டம் போடக்கூடாது

    திரு. என்பதை நீங்களே வச்சுக்குங்க....

    ReplyDelete
  6. ஓ அப்புடீங்களா? சும்மா நன்றீங்கோவ்..............

    ReplyDelete