Friday, March 29, 2013

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (7)



பவள சங்கரி

தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்


சிந்தித்து செயல்படுவோமா?



எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?

Thursday, March 28, 2013

வெளுத்ததெல்லாம் பால்தான்!





பவள சங்கரி

ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன் மீட்டிங்குல போய் சட்டம் பேசிண்டு, அழிச்சாட்டியம் பண்ணிண்டு இருக்கேளே.. இதுக்கு என்னண்ணா பன்றது? நீங்க கொடுத்த பெட்டிஷன் பெரிய புயலையேக் கிளப்பிடித்துன்னு எல்லோரும் புலம்பறாளே.. அந்த கலாட்டுவுல இப்ப பென்சனை நிறுத்தி வச்சிருக்காளே அவாளைப்போயி இப்ப கேக்க முடியாம தேமேன்னு உக்கார்ந்திண்டிருக்கேளே? இந்த மாசம் சாப்பாட்டிற்கு என்னண்ணா பன்றது?

”பின்ன என்னடி செய்யிறது? ஆத்துல நடக்குறதெல்லாம் பார்த்துண்டுதானே இருக்கே.... போன் மாசம் உன் இரவிக்கையை எடுத்துண்டு டெய்லர் கடைக்குப்போனா அங்க பெரிசா போர்ட் வச்சிருக்கான். ஒரு சாதா இரவிக்கைக்கு 170 ரூவா கேக்கறான். இத்தனைக்கும் அதுல ஒரு சன்னலோ அல்லது கவுரோ எதுவுமே இல்லாத பிளெயின் இரவிக்கை. இதுல வேடிக்கை என்னன்னா ஜாக்கிட் துணியே 80 ரூபாய்தான்.

Wednesday, March 27, 2013

வாலிகையும் நுரையும் - (15)




பவள சங்கரி

இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர்.

ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன்.
தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு தரமான கப்பலிது;  கோளாறில் உள்ளது உமது உந்தி மட்டுமே.

அடைய முடியாத எந்த ஒன்றிற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ அதுவே, நமக்கு ஏற்கனவே கிடைத்த ஒன்றைக் காட்டிலும் உயிரைப் போன்ற உன்னதமானதாக தோற்றமளிக்கும்.

 மேகத்தின் மீது அமரும் வாய்ப்பு அமைந்தால், ஒரு நாட்டிற்கும், மற்றொரு நாட்டிற்கும் உள்ள எல்லைக்கோட்டையோ அன்றி வயலுக்கும், மற்றுமொரு வயலுக்குமிடையேயுள்ள எல்லைக் கல்லையோ காண இயலாது உம்மால். ஓர் மேகத்தின் மீது அமர முடியாது உம்மால் என்பதும் பரிதாபம்.

Tuesday, March 26, 2013

Out Of My Deeper Heart - கலீல் ஜிப்ரான்



எம் ஆழ்மனப் புதையல்!


பவள சங்கரி


புள்ளொன்று விண்ணேகியது எம் ஆழ்மனதிலிருந்து.
உயர உயரப் பறப்பினுமது பரந்து,பரந்து வளர்ந்தது.
முதன்முதலில் தூக்கணாங்குருவி  போன்றிருந்த அது
பின் ஓர் வானம்பாடியாகவும், அதன்பின்னோர்
கழுகாகவும், வசந்த மேகமுமாக ஆனதோடு
விண்மீன்களின் சுவர்கத்தையும் நிறைத்தது.
விண்ணோக்கிப் பறந்ததோர் பறவை
எம் இதயக்கூட்டிலிருந்து.